ஐபிஎல் ரசிகர்கள் தயாராக இருங்க..! டிசம்பர் மாதத்தில் தொடங்க போகிறது ; மொத்தம் எத்தனை அணி தெரியுமா ?

ஐபிஎல் : கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனது ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள். 20 ஓவர் போட்டி என்றதால் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனால் இப்பொழுது ஆண்டுதோறும் தவறாமல் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதுவரை வெற்றிகரமாக 15 சீசன் நடைபெற்று முடிந்து. சர்வதேச போட்டியை காட்டிலும் ஐபிஎல் போட்டிக்கு தான் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது என்பது உண்மை. கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்றை காரணம் காட்டி இந்தியாவிற்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 2021 சீசனை நடத்தினார்கள்.

பின்பு ஐபிஎல் 2022யில் குறிப்பிட்ட மைதானத்தில் மட்டுமே ஐபிஎல் போட்டியை நடந்த வேண்டுமென்றும் எந்த அணிக்கு அவர்களது ஹோம் மைதானத்தில் விளையாட அனுமதி இல்லையென்றும் கூறியது பிசிசிஐ. ஆனால் ஐபிஎல் 2023ல் அனைத்து அணிகளும் அவரவர் ஹோம் மைதானத்தில் நடைபெற போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் போன்ற இரு புதிய அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. அதனால் அடுத்த ஆண்டு ஐபிஎல் 2023ல் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் , குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் போன்ற 10 அணிகளை கொண்டு விளையாட போகின்றனர்.

ஐபிஎல் 2022ல் இரு புதிய அணிகளை அறிமுகம் செய்ததால் மெகா ஏலம் நடைபெற்றது. ஆனால் அடுத்த ஆண்டு ஐபிஎல் 2023ல் மெகா ஏலம் நடைபெறாவிட்டாலும் குறைவான வீரர்களை வைத்து ஏலம் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம் தான். அந்த ஏலம் வருகின்ற டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவீந்திர ஜடேஜா நிச்சியமாக அணியில் இருந்து வெளியேறி இந்த ஏலத்தில் பங்கேற்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. ஏனென்றால் கடந்த ஐபிஎல் 2022ல் அவருக்கு ஏற்பட்ட பிரச்சனை தான் முக்கியமான காரணம். எந்த எந்த வீரர்கள் எந்த ஐபிஎல் அணியில் இடம்பெற வேண்டும் ?