ரவீந்திர ஜடேஜா போலவே தான் இவரும் இருக்கிறார் ; பிறகு ஏன் இவருக்கு வாய்ப்பு இல்லை ; முன்னாள் வீரர் ஆவேசம் ;

இன்று இரவு ஐபிஎல் போட்டியில் முதல் குவாலிபையர் போட்டி இன்று 7:30 மணியளவில் கொல்கத்தாவில் இருக்கும் ஈடன் கார்டனில் நடைபெற உள்ளது. அதில் ஹார்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோத உள்ளனர்.

இன்றைய போட்டி நிச்சியமாக விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதும்,அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமான நிலையில் தோல்வி பெற்றுள்ளது தான் உண்மை. ஏனென்றால் சென்னை அணி 14 போட்டிகளில் வெறும் மநான்கு போட்டியில் மட்டுமே வென்ற நிலையில் வெளியேறியுள்ளது.

இதுதான் சென்னை அணி இரண்டாவது முறை ஐபிஎல் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இருப்பினும், இந்த ஆண்டு ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டமும் சொல்லும் அளவிற்கு இல்லை என்பது தான் உண்மை. ஏனென்றால், இதுவரை விளையாடிய போட்டிகளில் பேட்டிங், பவுலிங் சரியாக இல்லை என்பது தான் உண்மை.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜடேஜா கேப்டன் என்ற செய்தி வெளியானது. அதில் இருந்து அவரால் (ரவீந்திர ஜடேஜா) சரியாக அணியை வழிநடத்தவும் முடியவில்லை. அவரால் சரியாகவும் விளையாட முடியவில்லை. அதனால் சென்னை அணி மட்டுமின்றி ரவீந்திர ஜடேஜாவும் திணறினார்கள்.

ஐபிஎல் 2022 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்க போகிறது இந்திய அணி. அதற்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது பிசிசிஐ. இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கூறுகையில் :

“இப்பொழுது எப்படி ரவீந்திர ஜடேஜா உள்ளாரோ, அதேபோல தான் மயங்க் அகர்வாலும் உள்ளனர். இதுவரை எந்த அணியையும் கேப்டனாக வழிநடத்தாமல் தீடிரென்று மயங்க் அகர்வாலிடம் கேப்டன் பதவியை கொடுத்தது ஒன்று தவறு இல்லை. எனக்கு தெரியும் அவர் (மயங்க் அகர்வால்) எப்படி விளையாடுவார் என்று.”

“ஆனால் ஒரு தவறு நடந்தால் அந்த இடத்தில் அடுத்த முறை சரி செய்து விளையாடி வருகிறார் மயங்க் அகர்வால். சமீபத்தில் அவர் எப்படி விளையாடுகிறார் என்பதை வைத்து தான் இந்திய அணியில் விளையாட வாய்ப்புகளை கொடுத்து வருகின்றனர். அது தான் எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது.”

“எனக்கு தெரிந்து அவர் எப்படிப்பட்ட வீரர் என்று. கேப்டன் பதவி இருந்தால் நிச்சியமாக அழுத்தம் ஏற்படுவது வழக்கம் தான். ஜடேஜாவுக்கு கேப்டன் பதவி கொடுத்த காரணத்தால் அவரால் அவரது விளையாட்டை சரியாக விளையாட முடியவில்லை என்பது தான் உண்மை.”

எங்களுக்கு தெரியும் அவர்கள் இருவரும் எப்படி திறமையான வீரர்கள் என்று. அதனால் இனிவரும் வரும் போட்டிகளில் கேப்டனை தேர்வு செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ரவி சாஸ்திரி.”