விராட்கோலியை விட இவர் தான் எங்கள் அணியின் முக்கியமான சொத்து ; டூப்ளஸிஸ் பேட்டி

நேற்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற போட்டியில் டூப்ளஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்கத்தில் இருந்து ஒருவர் மாற்றி ஒருவர் பார்ட்னெர்ஷிப் செய்த காரணத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்த நிலையில் 169 ரன்களை அடித்தனர். அதில் ஜோஸ் பட்லர் 70, ஜெய்ஸ்வால் 4, படிக்கல் 37, சஞ்சு சாம்சன் 8, ஹெட்மாயேர் 42 ரன்களை அடித்தனர்.

பின்னர் 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பெங்களூர் அணி. தொடக்கத்தில் சற்று தடுமாற்றத்தை ஏற்படுத்தி விளையாடிய நிலையில் விராட்கோலி, வில்லேய், ருத்தேர்போர்ட் போன்ற விக்கெட்டைகள் தொடர்ந்து இழந்தனர். அதனால் பெங்களூர் அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியது.

இருப்பினும், ஷாபாஸ் அகமத் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் இணைந்து 80-க்கு மேற்பட்ட ரன்களை அடித்தனர். அதனால் 19.1 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் 173 ரன்களை அடித்த பெங்களூர் அணி 4 விக்கெட்டை வித்தியாசத்தில் வென்றுள்ளனர்.

அதில் டூப்ளஸிஸ் 29, அனுஜ் ராவத் 26, விராட்கோலி 5, டேவிட் 0, ருத்தேர்போர்ட் 58, தினேஷ் கார்த்திக் 44, அகமத் 45 ரன்களை அடித்துள்ளனர். இதுவரை 3 போட்டிகளில் விளையாடிய பெங்களூர் அணி 2 போட்டிகளில் வென்று புள்ளிபட்டியலில் 6வது இடத்தில் உள்ளனர்.

இந்த போட்டியை பற்றி பேசிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனான டூப்ளஸிஸ் : “எந்த சூள்நிலை ஏற்பட்டாலும் அதில் இருந்து மேல் வர வேண்டும் என்பது மிகவும் முக்கியம். அதுவும் தினேஷ் கார்த்திக் போன்ற ஒரு வீரர் நிச்சியமாக அணியில் இருக்க வேண்டும்.”

“அவ்வளவு கடினமான நேரத்திலும் சிறப்பாக விளையாடியுள்ளார் தினேஷ் கார்த்திக். அதுமட்டுமின்றி நாங்கள் 18ஓவர் வரை சிறப்பாக தான் பவுலிங் செய்தோம். அதன்பின்னர் ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாட தொடங்கிவிட்டார். பின்னர் இறுதியாக அவர்கள் அடித்த ரன்களை பார்க்கும் போது கொஞ்சம் கடினமாக தான் இருக்கும் என்று நினைத்தோம்.”

“நாங்க பேட்டிங் செய்யும்போது சிறப்பாக தான் தொடங்கினோம். ஆனால் எதி அணியின் பவுலர் யுஸ்வேந்திர சஹால் சிறப்பாக பவுலிங் செய்து விக்கெட்டை கைப்பற்றினார். எனக்கு இதில் ரொம்ப முக்கியமான ஒன்று, எங்கள் அணி தோல்வி பாதையில் இருந்து வெற்றி பாதைக்கு வந்துள்ளது.”

“அதுதான் மிகவும் முக்கியமான ஒன்று. அதுமட்டுமின்று, அகமத் சின்ன பையன் ரன்களை அடிக்கமாட்டான் என்று பலர் கூறியுள்ளனர். ஆனால் இன்றைய போட்டியில் அவரது விளையாட்டு மிகவும் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. விராட்கோலி பிட்னெஸ் ஆக விளையாடி கொண்டு தான் வருகிறார்.” இதனை நான் அவரது (விராட்கோலி) ரசிகர்களிடம் சொல்ல ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார் டூப்ளஸிஸ்.