நான் இந்திய அணியின் தேர்வாளராக இருந்திருந்தால் இவரை தான் தேர்வு செய்திருப்பேன் ; மேத்யூ ஹைடன் பேட்டி ;

0

நாளை இரவு முதல் தென்னப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்று டி-20 போட்டிக்கான தொடர் போட்டிகள் நடைபெற உள்ளது. நாளை இரவு 7 மணியளவில் திருவனந்தபுரத்தில் போட்டிகள் நடைபெற உள்ளது. அதில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய கிரிக்கெட் அணியும், பவும தலைமையில் தென்னாபிரிக்கா அணியும் விளையாட உள்ளனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டி-20 போட்டிகளில் 2 – 1 என்ற கணக்கில் வெற்றியை கைப்பற்றிய நிலையில் தொடரையும் கைப்பற்றியது இந்திய. அதேபோல தென்னாபிரிக்கா அணிகளுக்கு எதிரான டி-20 போட்டியிலும் வெல்லுமா இந்திய ?

சில தினங்களுக்கு முன்பு தான் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டி-20 போட்டிகளில் விளையாடும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ. அதில் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால், அக்சர் பட்டேல், அர்ஷதீப் சிங், முகமது ஷமி, ஹர்ஷல் பட்டேல், தீபக் சஹார், பும்ரா போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான மூன்று டி-20 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொள்ள போகின்றனர். ஏனென்றால், ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிக்கான பயிற்சி ஆட்டங்கள் தொடங்க உள்ளது. அதனால் ராகுல் டிராவிட் மற்றும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5ஆம் தேதி ஆஸ்திரேலியா செல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த போட்டிகளை வைத்து ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் யார் யார் இடம்பெற போகின்றனர் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.இருப்பினும் இந்திய அணியின் முன்னணி வீரரான ரிஷாப் பண்ட் -க்கு இப்பொழுது வாய்ப்பு கிடைப்பதே இல்லை.

தினேஷ் கார்த்திக் அணியில் இடம்பெற்ற பிறகு ரிஷாப் பண்ட்-க்கு குறைவான வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கிறது. ஒருசிலர் ரிஷாப் பண்ட் இந்திய அணிக்கு தேவையான வீரர் என்றும் இன்னும் சிலர் தினேஷ் கார்த்திக் தான் சிறந்த பினிஷர் என்றும் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதனால் அணியில் தினேஷ் கார்த்திக் ஆ ? ரிஷாப் பண்ட் ஆ ? என்ற குழப்பத்தில் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உள்ளனர். இதனை பற்றி பேசிய ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான மேத்யூ ஹைடன் ; சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்திய அணியில் யார் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

அதில் “எனக்கு தெரிந்து ரிஷாப் பண்ட் ஆஸ்டர்லியாவில் சிறப்பாக விளையாட அதிக வாய்ப்பு உள்ளது. நிச்சியமாக இந்த ஆண்டு டி-20 உலகக்கோப்பை போட்டிக்கு ரிஷாப் பண்ட் -ஐ தயார் செய்ய வேண்டும். அதுவும் இந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. அதனால் பெரிய ஷாட்ஸ் அடிக்கும் வீரர்கள் தான் அணியில் இடம்பெற வேண்டும்.”

“நிச்சியமாக தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடுவார், இருந்தாலும் MCG மைதானம் மிகப்பெரிய ஒன்று. அங்கு சரியான இடத்தை பார்த்து அடித்தால் மட்டுமே பவுண்டரிகளை அடிக்க முடியும். அதனால் குறைந்தது அணியில் 3 அல்லது 4 அதிரடியாக அடிக்க கூடிய வீரர்கள் அணியில் இருக்க வேண்டும்.”

“அந்த இடத்தில் நிச்சியமாக ரிஷாப் பண்ட் இருக்க வேண்டியது அவசியம். அதனால் அவரது விளையாட்டு சில போட்டிகளில் அதிகமாக பார்க்க முடியவில்லை, இருப்பினும் இனிவரும் போட்டிகளில் அவரது விளையாட்டை பார்க்க நான் ஆவலோடு இருக்கிறேன் என்று கூறியுள்ளார் மேத்யூ ஹைடன்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here