இதுதான் டி-20 உலகக்கோப்பை போட்டிக்கான ப்ளேயிங் 11 ; ஆனால் பினிஷர் இடத்தில் யார் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது ; ராகுல் , ரோஹித் குழப்பம் ;

0

உலா கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி முதல் நவம்பர் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனால் விறுவிறுப்பான தொடருக்கு நிச்சியம் பஞ்சம் இருக்காது.

அதுமட்டுமின்றி அனைத்து உலக நாடுகளும் அவரவர் கிரிக்கெட் அணிகளில் விளையாட போகும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதேபோல சமீபத்தில் தான் இந்திய அணியின் 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது பிசிசிஐ.

இந்திய அணியின் விவரம் :

கேப்டன் (ரோஹித் சர்மா ), கே.எல்.ராகுல், விராட்கோலி, சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்டிக் பாண்டிய, ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால், அக்சர் பட்டேல், ஜஸ்பிரிட் பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல் மற்றும் அர்ஷதீப் சிங் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டியில் மோசமான தோல்விகளை பெற்று அரையிறுதி சுற்றுக்கு கூட தகுதி பெறாத நிலையில் வெளியேறியது இந்திய. அதனால் இந்த சிறப்பாக விளையாட வேண்டுமென்று அனைத்து விதமான முயற்சிகளையும் கையில் எடுத்துள்ளனர்.

இருப்பினும் ப்ளேயிங் 11 சிறப்பாக அமைந்தால் தான் போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். அப்போ ப்ளேயிங் 11 ல் எந்த எந்த வீரர்கள் இடம்பெற போகின்றனர் என்று பல குழப்பங்கள் எழுந்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று டி-20 லீக் போட்டிகளில் 2 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய.

அதனால் நிச்சியமாக மூன்றாவது போட்டியில் விளையாடிய ப்ளேயிங் 11 தான் உலகக்கோப்பை போட்டிக்கான ப்ளேயிங் 11 ஆக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும் அதில் புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக அர்ஷதீப் சிங் மற்றும் தினேஷ் கார்த்திக்கு பதிலாக ரிஷாப் பண்ட் ஆகிய இரு மாற்றங்கள் மட்டுமே நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது.

உலகக்கோப்பை போட்டிக்கான உத்தேச அணியின் விவரம் :

ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட்கோலி, சூரியகுமார் யாதவ், ஹர்டிக் பாண்டிய,தினேஷ் கார்த்திக்,யுஸ்வேந்திர சஹால், அக்சர் பட்டேல், ஜஸ்பிரிட் பும்ரா, ஹர்ஷல் பட்டேல் , புவனேஸ்வர் குமார் அல்லது அர்ஷதீப் சிங்.

கிரிக்கெட் ரசிகர்களே..! நீங்க சொல்லுங்க உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் யார் யார் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் ? இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி வெல்லுமா ? இல்லையா ?

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here