பவுலர்களிடம் நான் சொன்ன ஒரே விஷயம் இது மட்டும் தான் ; தோனி ஓபன் டாக் ;

ஐபிஎல் 2022 :

ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிலும் நேற்று நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் அமைந்தது. அதிலும் ருதுராஜ் 99, டேவன் கான்வே 85 ரன்களை அடித்தனர். அதனால் 20 ஓவர் முடிவில் 202 ரன்களை அடித்துள்ளனர். அதனால் 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி, ஆனால் இறுதி வரை போராடி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை பெற்றது சன்ரைசர்ஸ்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிலைமை :

இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 9 போட்டிகளில் 3 போட்டியில் வென்று புள்ளிபட்டியலில் 9வது இடத்தில் உள்ளனர். இன்னும் மீதமுள்ள 5 போட்டிகளிலும் சென்னை அணி வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே – ஆஃப் சுற்றுக்கு வாய்ப்பு இருக்கும்…!

பவுலர்களை பற்றி பேசிய தோனி :

“எங்கள் அணியில் பவுலிங்கில் சில மாற்றங்களை செய்ய வேண்டுமென்று நான் நினைத்தேன். அதிலும் நன் எப்பொழுதும் பவுலர்களிடன் ஒன்று மட்டும்தான் சொல்லுவேன். அதில் ஒருவர் பவுலிங் செய்யும்போது முதல் நான்கு பந்தில் பேட்ஸ்மேன் கள் சிக்ஸர் அடித்தாலும் பரவாயில்லை. “

“மீதமுள்ள இரு பந்தில் ரன்களை கட்டுப்படுத்தினால் கூட நல்ல விஷயம் தான். ஏனென்றால் அதிக ரன்களை அடிக்கும்போது இந்த மாதிரி கட்டுப்படுத்தினால் கூட வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு என்பது மிகவும் அதிகமாக உள்ளது தான் உண்மை.” இதனை சொன்னதிற்கு முக்கியமான காரணம் ;

“4 சிக்ஸர் அல்லது பவுண்டரிகளை ஒரு பவுலர் கொடுத்துவிட்டால் அவ்வளவு தான் என்று யோசித்து வருகின்றனர். ஆனால் மீதமுள்ள இரு பந்தை சரியாக பவுலிங்செய்தால் விக்கெட் அல்லது பவுடரிகளை விடாமல் தடுத்தால் கூட அணிக்கு வெற்றிவாய்ப்பு அதிகமாக தான் இருக்கும் என்று கூறியுள்ளார் தோனி.”

கிரிக்கெட் ரசிகர்களே..! மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக தோனி பொறுப்பேற்றது சரியா ?? அல்லது தவறா ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!