என்ன இப்படி வெறித்தமாக பேட்டிங் செய்கிறார் ; எனக்கு அவரது பேட்டிங் பிடித்தது ; இந்திய வீரரை பற்றி பேசிய ; ஆரோன் பின்ச் ;

நேற்று இரவு ஹைதெராபாத்-ல் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டி-20 போட்டியில் ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய வழக்கம் போல பவுலிங்கை தேர்வு செய்தனர்.

முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு நிதானமான தொடக்க ஆட்டம் அமைந்தது. இருப்பினும் வழக்கம் போல ஆஸ்திரேலியா வீரரான க்ரீன் அதிரடியாக விளையாடி ரன்களை விளாசினார். அவரை தொடர்ந்து ஸ்டீவன் ஸ்மித், மேக்ஸ்வெல் போன்ற வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டை இழந்தாலும் மாத்தியூ வெட் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்துள்ளார்.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்த நிலையில் 186 ரன்களை அடித்தனர். அதில் அதிகபட்சமாக க்ரீன் 52, பின்ச் 7, ஸ்டீவன் ஸ்மித் 9, மேக்ஸ்வெல் 6, ஜோஷ் இங்கிலீஸ் 24, டிம் டேவிட் 54 மற்றும் டேனியல் சாம்ஸ் 28 ரன்களை அடித்துள்ளனர்.

பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கியது இந்திய கிரிக்கெட் அணி. தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவரும் பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் தொடர்ந்து விக்கெட்டை இழந்தனர். ஆனால் மிடில் பேட்ஸ்மேனான விராட்கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி 120க்கு மேற்பட்ட ரன்களை விளாசினார்கள்.

பின்பு இறுதி நேரத்தில் ஹர்டிக் பாண்டிய 16 பந்தில் 25 ரன்களை அடித்ததும் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. ஏனென்றால் இந்திய அணி 19.5 ஓவரில் ( 1 பந்து மட்டுமே) மீதமுள்ள நிலையில் 187 ரன்களை அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது இந்திய.

அதனால் 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருந்ததால் டி-20 போட்டிக்கான தொடரையும் இந்திய அணி வென்றுள்ளது. போட்டி முடிந்த பிறகு பேசிய ஆஸ்திரேலியா அணியின் கேப்டனான ஆரோன் பின்ச் கூறுகையில் ; “இந்த சீரியஸ் தொடர் மிகவும் சிறப்பாக அமைந்தது. இந்திய அணியுடன் சண்டை போட்ட விதம் மிகவும் அற்புதமான ஒன்று தான்.அதுமட்டுமின்றி இளம் வீரரான க்ரீன் அவரது முக்கியத்துவத்தை வெளிக்காட்டியுள்ளார்.”

“ஆனால் அவர்களது (இந்திய) விக்கெட்டை கைப்பற்றிருக்க வேண்டும். அதனை விட்டுவிட்டு விக்கெட்டை கைப்பற்றாமல் அப்படியே பொடியை வெல்வது மிகவும் கடினம், அதுவும் இந்தியாவிடம் வாய்ப்பு இல்லை. இந்த முறை எங்கள் பேட்டிங் மற்றும் பவுலிங் சற்று சோர்வாக இருந்தாலும் உலகத்தரம் வாய்ந்த அணியுடன் (இந்திய) வுடன் மோதியது நல்ல ஒரு அனுபவம் தான்.”

“அதுமட்டுமின்றி இந்திய அணியை வெற்றி பாதைக்கு ஒரு வெறியோடு கொண்டு சென்றுள்ளார் விராட்கோலி. அவரது பேட்டிங் எனக்கு மிகவும் பிடித்துள்ளது என்று கூறியுள்ளார் ஆரோன் பின்ச்.”