ரோஹித் மற்றும் ராகுல் டிராவிட் சொன்னதால் தான் நான் இதை செய்தேன் ; விராட்கோலி பேட்டி ;

இந்திய மற்றும் ஆஸ்திரேலி அணிகளுக்கு எதிரான மூன்று டி-20 போட்டிக்கான தொடர் போட்டிகள் நேற்றுடன் நடந்து முடிந்துள்ளது. அதில் 2 – 1 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி முன்னிலையில் இருந்த காரணத்தால் தொடரை கைப்பற்றியுள்ளது..!

மூன்றாவது போட்டியின் விவரம் :

டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி தொடக்க ஆட்டம் சரியாக அமையவில்லை. இருப்பினும் இளம் வீரரான க்ரீன் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். பின்ச், ஸ்டீவன் ஸ்மித், மேக்ஸ்வெல் போன்ற வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டே வந்தனர்.

ஆனால் டிம் டேவிட் சிறப்பாக விளையாடி ரன்களை அடித்தார். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7விக்கெட்டை இழந்த நிலையில் 186 ரன்களை மட்டுமே அடித்தனர். அதில் க்ரீன் 52, ஜோஷ் 24, டிம் டேவிட் 54 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளார். பின்பு 187 ரன்களை அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய.

தொடக்க வீரர்களான கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் பெரிய அளவில் போட்டியை தொடங்காத நிலையில் விக்கெட்டை இழந்தனர். ஆனால் விராட்கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் அதிரடியாக விளையாடி இந்தியா அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர்.

இருப்பினும் இறுதி ஓவர் வரை விளையாடிய இந்திய அணி 19.5 ஒவேரில் 187 ரன்களை அடித்து 6 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது இந்திய. போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் விராட்கோலி ; ” நான் என்னுடைய அனுபவத்தை வைத்து அணிக்கு என்ன தேவை என்பதை புரிந்து கொண்டு விளையாடினேன்.”

“அதுவும் ஆடம் சம்ப ஓவரில் நான் அதிரடியாக விளையாடியது சிறந்த விஷயம் தான். ஏனென்றால் அவரது பவுலிங் அதுவும் மிடில் ஓவரில் மிகவும் கடினமான விஷயம் தான். ரோஹித் சர்மா விக்கெட்டை இழந்த நிலையில் சூரியகுமார் யாதவ் களமிறங்கினார். அப்பொழுது சூர்யா அதிரடியாக விளையாடியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.”

“அப்பொழுது நான் ரோஹித் மற்றும் ராகுல் டிராவிட் ஐ பார்த்தேன். அப்பொழுது அவர்கள் ; நீயும் சூர்யகுமார் யாதவிடம் தொடர்ந்து ஸ் விளையாடு என்று சொன்னார்கள். எனக்கு சிறந்த பார்ட்னெர்ஷிப் உருவாக்க வேண்டுமென்று தான் நினைத்தேன். என்னுடைய அனுபவத்தை நான் உபயோகித்தேன். ஆனால் சூர்யகுமார் யாதவ் (அவர்) என்ன செய்கிறார் என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறார்.”

“சூரியகுமார் யாதவ் எந்த இடத்தில் வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் பேட்டிங் செய்ய கூடிய திறன் அவருக்கு உள்ளது. இங்கிலாந்து நாட்டில் சதம் அடித்துள்ளார். அதுமட்டுமின்றி ஆசிய கோப்பை போட்டிகளிலும் சிறப்பாக விளையாடினார். கடந்த 6 மாதங்களாக சிறப்பாக விளையாடி கொண்டு வருகிறார் சூர்யகுமார் யாதவ்.”

“அதுமட்டுமின்றி எந்த நேரத்தில், எந்த இடத்தில் அடித்தால் [பவுண்டரி செல்லும் என்பதை புரிந்து கொண்டு விளையாடி வருகிறார் சூர்யகுமார். இது பிரமாண்டமான திறமை என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்று கூறியுள்ளார் விராட்கோலி.” விராட்கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் போன்ற இரு வீரர்களின் காம்போ உலகக்கோப்பை போட்டியில் சிறப்பாக இருக்குமா ? இல்லையா ?