இந்த இரு வீரர்களுக்கு கொஞ்சம் ஓய்வு தேவைப்படுகிறது ; இன்னும் சில விஷயங்கள் சரி செய்யவேண்டியுள்ளது ; ரோஹித் சர்மா பேட்டி ;

0

ஹைதெராபாத் : நேற்று இரவு 7:00 மணியளவில் தொடங்கிய மூன்றாவது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியும் மோதின. இந்த போட்டி ஹைதெராபாத்-ல் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங் :

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு சிறந்த தொடக்க ஆட்டம் அமைந்தது. என்னதான் கேப்டன் பின்ச் விக்கெட்டை இழந்தாலும் க்ரீன் வழக்கம் போல் அவரது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

21 பந்தில் 52 ரன்களை விளாசினார் க்ரீன். இருப்பினும் தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டே வந்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்த நிலையில் 186 ரன்களை அடித்துள்ளனர். அதில் க்ரீன் 52, பின்ச் 7, ஸ்டீவன் ஸ்மித் 9, மேக்ஸ்வெல் 6, ஜோஷ் இங்கிலீஸ் 24, டிம் டேவிட் 54 மற்றும் டேனியல் சாம்ஸ் 28 ரன்களை அடித்துள்ளனர்.

இந்திய அணியின் இலக்கு:

பின்பு 187 ரன்களை அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய. தொடக்க வீரரான கே.எல்.ராகுல் 1 ரன்னை அடித்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதுமட்டுமின்றி ரோஹித் சர்மாவும் பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் விக்கெட்டை இழந்துள்ளார். ஆனால் விராட்கோலி, சூரியகுமார் யாதவின் அதிரடியான பார்ட்னெர்ஷிப் தான் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.

ஏனென்றால் 19.5 ஓவர் வரை போராடிய இந்திய அணி 187 ரன்களை அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது. இதில் கே.எல்.ராகுல் 1, ரோஹித் சர்மா 17, விராட்கோலி 63, சூர்யகுமார் யாதவ் 69, ஹர்டிக் பாண்டிய 25 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி 2 – 1 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் முன்னிலையில் இருந்ததால் டி-20 போட்டிக்கான தொடரையும் கைப்பற்றியுள்ளது. என்னதான் முதல் போட்டியில் தோல்வி பெற்றாலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றியை கைப்பற்றியுள்ளது இந்திய.

ரோஹித் சர்மா பேட்டி:

வெற்றியை பற்றி பேசிய ரோஹித் : “இந்த இடம் எனக்கு மிகவும் முக்கியமானது. ஏனென்றால் இந்த இடத்தில் நான் இந்திய அணிக்கும் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் டெக்கான் சார்ஜ்ர்ஸ் அணிக்காக விளையாடியுள்ளேன். இதில் மிக முக்கியமான விஷயம் தனி தனி வீரர்கள் அவர்களது திறமையை முன்னேற்றிக்கொண்டு வருகின்றனர்.”

“அதனால் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி முன்னேறியுள்ளோம். ஆனால் சில நேரங்களில் தடுமாற்றம் ஏற்படும். என்னதான் வெற்றி பெற்றாலும் சில இடங்களில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு எதிராக காம்பேக் கொடுப்பது அவ்வளவு சுலபம் இல்லை.”

“இந்திய அணியில் பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகிய இருவருக்கும் சற்று ஓய்வு தேவைப்படுகிறது. நிச்சியமாக அடுத்த சீரியஸ் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார்கள் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”

ஹர்ஷல் பட்டேல் மற்றும் பும்ரா ஆகிய இரு வீரர்களும் காயத்திற்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் விளையாடி வருகின்றனர். ஆனால் நேற்று நடந்த மூன்றாவது போட்டியில் 4 ஓவர் பவுலிங் செய்த பும்ரா 50 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி ஹர்ஷல் பட்டேல் 2 ஓவர் பவுலிங் செய்து 18 ரன்கள் விட்டுக்கொடுத்த நிலையில் 1 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here