இரு புதிய பவுலர்களை களமிறங்க போகும் சென்னை அணி இதுதானாம்..! அப்போ வெற்றி உறுதி தான் ; முழு விவரம் இதோ

0

ஐபிஎல் தொடங்கி சில நாட்களே ஆகியுள்ளது. இதுவரை 8 போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு போலவே இந்த ஆண்டு சென்னை அணிக்கு மிகவும் மோசமான ஆண்டாக மாறியுள்ளது. ஆமாம், அதற்கு என்ன காரணம் என்று கேட்டால் அது பவுலிங் தான்..!

ஐபிஎல் மெகா ஏலத்தில் கைப்பற்றிய தீபக் சஹாருக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் அவரால் ஐபிஎல் 2022 முதல் பாதி போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆமாம், குட்டினால் சென்னை அணிக்கு சரியான பவுலிங் கிடைக்காத காரணத்தால் போட்டிகளில் தோல்வியை சந்தித்து வருகின்றனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய சென்னை அணி 210 ரன்களை விளாசினார்கள். ஆனால் அதிலும் சரியான பவுலிங் இல்லாத காரணத்தால் ரன்களை சரிமாரியாக கொடுத்து லக்னோ அணி வெற்றி பெற்றுள்ளது. சென்னை அணியை பொறுத்தவரை பேட்டிங் பற்றி ஒருதுளி கவலை வேண்டாம்.

நாளை இரவு 7:30 மணியளவில் மும்பையில் உள்ள ப்ராபோர்னே மைதானத்தில் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளனர். ப்ளேயிங் 11ல் நிச்சியமாக சில மாற்றங்கள் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஓப்பனிங் பேட்ஸ்மேன் ; ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ராபின் உத்தப்பா இவர்களது ஆட்டத்தை லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பார்த்தோம். ருதுராஜ் கெய்க்வாட்-க்கு இன்னும் சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை. அவரது விக்கெட் தேவை இல்லாமல் இழந்து வருகிறார். ஆனால் இதுதான் சென்னை அணியின் அசைக்க முடியாத ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் என்பதில் சந்தேகமில்லை.

டாப் ஆர்டர் : மொயின் அலி, அம்பதி ராயுடு போன்ற இரு வீரர்கள் உள்ளனர். இவர்கள் அரைசதம் அடிக்கிறார்களோ இல்லையோ..! ஆனால் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் எந்த விதமான மாற்றமும் இல்லை.

மிடில் ஆர்டர் : ஷிவம் துபே, தோனி , ரவீந்திர ஜடேஜா போன்ற மூன்று அதிரடியான வீரர்கள் உள்ளனர். ஆமாம், இப்பொழுதெல்லாம் சென்னை அணியின் முன்னாள் கேப்டனான தல தோனி இப்பொழுதெல்லாம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கிவிட்டார்.

ஆமாம், ஐபிஎல் 2022 தொடங்கிய முதல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தோனி இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 50 ரன்களை விளாசியுள்ளார். அதேபோல லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 6 பந்தில் 16 ரன்களை அடித்துள்ளார்..!

அதனால் பேட்டிங் பற்றிய கவலை நிச்சியமாக இருக்காது. இருப்பினும் பவுலிங் வீரர்கள் யாரை யார் இடம்பெற போகிறார்கள் என்று பல குழப்பம் எழுந்துள்ளது. ஆமாம், கடந்த போட்டியில் பிரிட்டோரியஸ், பிராவோ, முகேஷ் சவ்த்திரி , தேஷ்பாண்டே போன்ற வீரர்கள் இடம்பெற்றனர்.

இதில் தேஷ்பாண்டே மற்றும் முகேஷ் ஆகிய இருவரும் எதிர்பார்த்த அளவிற்கு பவுலிங் செய்யவில்லை. அதுமட்டுமின்றி ஓவருக்கு 10 ரன்கள் என்ற கணக்கில் ரன்களை கொடுத்துள்ளனர். அதனால் இன்றைய போட்டியில் இவர்கள் இருவரில் ஒருவரை வெளியேற்றிவிட்டு வெளிநாட்டுவீரரான கிறிஸ் ஜோர்டானுக்கு வாய்ப்பு கொடுத்தால் அணியில் மாற்றம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது..!

சென்னை ரசிகர்களே, நீங்க சொல்லுங்க சென்னை அணியின் ப்ளேயிங் 11ல் யார் யார் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள கமெண்ட்ஸ் பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here