இந்திய அணியில் இவர் இருப்பதால் தான் தோல்வியே ; இவரை முதலில் மாற்றுங்கள்; பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக்….! அதிரடி பேட்டி ..!

ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பவுலிங் செய்ய முடிவு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சிறப்பான ஓப்பனிங் அமையவில்லை. இருந்தாலும் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி இறுதிவரை போராடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 151 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 152 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பாகிஸ்தான் அணி.

இந்திய அணி பவுலர்களால் கூட கைப்பற்ற முடியவில்லை என்பது தான் உண்மை. அதனால் 17.5 ஓவர் முடிவில் 152 ரன்களை அடித்து இந்திய அணியை 10 விக்கெட்டை வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான் அணி. இதனை பற்றி பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான இன்சமாம் உல் ஹக் அளித்த பேட்டியில்,

இந்திய அணியின் தோல்வியை பற்றி பேசியுள்ளார், அதில் ” இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஹார்டிக் பாண்டிய தான். பாகிஸ்தான் கேப்டனுக்கு தெறியும் எப்படி அணியை தேர்வு செய்ய வேண்டும் என்று. ஆனால் அதே இந்திய கிரிக்கெட் அணியால் சரியான ப்ளேயிங் 11 ஐ தேர்வு செய்ய முடியவில்லை.

அதுமட்டுமின்றி, 19வது ஓவரில் ஹார்டிக் பாண்டிய அவரது தோள்பட்டையில் கைவைத்து அவருக்கு வலி இருப்பதை வெளிக்காட்டினார். பாண்டியவை வைத்து இந்திய அணி வெற்றி பெறுமா? என்பதில் சந்தேகம் தான். ஏனென்றால் போட்டியில் விளையாடும் போது ஏதாவது அடிபட்டுவிட்டால் அதனை தெரியாமல் விட்டுவிட வேண்டும்.

அதனை வலிப்பது போல காட்டி பலவீனம் ஆக கூடாது. சில ஆண்டுகளுக்கு முன்பு சச்சின் டெண்டுல்கருக்கு ஏதாவது அடிபட்டுவிட்டால் அவர் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார். ஆனால், அதற்கு எதிர்மாறாக செய்துள்ளார் ஹார்டிக் பாண்டிய.

அதுமட்டுமின்றி, இந்திய அணியுடன் ஐந்து பவுலர்கள் மட்டுமே உள்ளனர். 6வதாக ஒரு பவுலர் வேண்டும் என்பதை இந்திய அணி மறந்துவிட்டது. அதனால் தான் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு மிகப்பெரிய அழுத்தம் ஏற்பட்டது.

இந்திய அணி 6வதாக ஒரு பவுலர் இருந்திருந்தால் நிச்சியமாக சிறப்பான அணியாக இந்திய இருந்திருக்க கூடும் என்று கூறியுள்ளார் இன்சமாம் உல் ஹக்…! அடுத்த போட்டியில் ஆல் -ரவுண்டர் ஹார்டிக் பாண்டிய அணியில் இருக்க வேண்டுமா ?? வேண்டாமா?? என்று Comments பண்ணுங்க….!!!