இந்திய அணியை யார் வேண்டுமானாலும் வீழ்த்த முடியும்…! சரி செய்ய வேண்டிய இரண்டு முக்கியமான விஷயம்..; முன்னாள் இங்கிலாந்து அணியின் கேப்டன் நாசர் ஹுசைன் பேட்டி

ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு வருகின்ற நிலையில், பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, இந்த முறை இந்திய அணிதான் கோப்பையை வெல்லும் என்று கூறியுள்ளனர்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மற்றும் கேப்டனான நாசர் ஹுசைன் இந்திய அணியை பற்றி அவரது கருத்தை கூறியுள்ளார்..! இந்திய அணிக்கு இந்த இரண்டு பிரச்சனை உள்ளது. அதனை சரி செய்யவில்லை என்றால் நிச்சயமாக அடுத்த போட்டியிலும் தோல்விதான்.

அதனை பற்றி பேசிய ஹுசைன் : இந்திய அணியின் மிடில் ஆர்டர் மிகவும் மோசமான நிலையில் உள்ளது தான் உண்மை. ஏனென்றால் தொடக்க வீரர்கள் யாராவது ஆட்டம் இழந்துவிட்டால், பின்னர் வரும் பேட்ஸ்மேன்கள் சொல்லும் அளவுக்கு பேட்டிங் செய்வதே கிடையாது.

அதுமட்டுமின்றி, சமீப காலமாக ஐசிசி போட்டிகளில் விளையாடிய இந்திய அணி சொல்லும் அளவுக்கு விளையாடவில்லை. ஆனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது. அதனை புரிந்து கொண்டு விளையாடினால் சிறப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார் நாசர் ஹுசைன்.

நாசர் ஹுசைன் சொல்லுவது போல, சமீபத்தில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது இந்திய அணி. அதில் தொடக்க வீரர்களான கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் ஆட்டம் இழந்த பிறகு மிடில் ஆர்டர் சரியாக விளையாட வில்லை, விராட்கோலி-யை தவிர.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 151 ரன்களை அடித்துள்ளனர்.அதனை மட்டும் சரி செய்துவிட்டால் நித்தியமாக இந்திய அணியை யாரையும் வீழ்த்த முடியாது என்று கூறியுள்ளார் நாசர் ஹுசைன். வருகின்ற 31ஆம் தேதி அன்று விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் மோத உள்ளனர்.

இந்த முறை ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றுமா ? இந்திய அணி ?? உங்கள் கருத்தை மறக்காமல் COMMENTS பண்ணுங்க…!