ரோஹித் சர்மாவிற்கு பதிலாக இவர் டி-20 போட்டிக்கான கேப்டனாக இருக்கலாம் ; தப்பே இல்லை ; ரவி சாஸ்திரி ஓபன் டாக் ;

0

சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி மோசமான நிலையில் வெளியேறியது.

மற்ற அணிகளுக்கு எதிரான போட்டியில் மட்டும் சிறப்பாக விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை, ஆசிய கோப்பை போன்ற போட்டிகளில் மட்டும் தொடர்ந்து தோல்வியை பெற்று வருகின்றனர். இந்த முறை வலுவாக இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி தான் உலகக்கோப்பை வெல்லும் என்று அனைவரும் நினைத்து கொண்டு இருந்தனர். ஆனால் ஏமாற்றம் தான் மிஞ்சியது.

ஏனென்றால், அரையிறுதி சுற்றில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியால் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியாமல் போனது. அதனால் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. அதுமட்டுமின்றி, இந்த உலகக்கோப்பை போட்டியில் விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்டிக் பாண்டிய போன்ற வீரர்கள் மட்டுமே அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியுள்ளனர்.

அதே சமையத்தில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கியமான காரணம் சிறப்பாக அமையாத தொடக்க ஆட்டம் தான் என்று பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதனால் டி-20 போட்டிக்கான கேப்டனாக ஹர்டிக் பாண்டிய இருந்தால் நிச்சியமாக சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஐபிஎல் 2022ல் புதிய அணியாக அறிமுகம் ஆனது குஜராத் டைட்டன்ஸ் அணி. அதனை ஆல் – ரவுண்டர் ஹர்டிக் பாண்டிய தான் சிறப்பாக வழிநடத்தி வந்தனர். அதுமட்டுமின்றி, அறிமுகம் ஆன முதல் ஆண்டிலேயே கோப்பையை வென்ற பெருமையை பெற்றுள்ளது ஹர்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி.

அதனால் சர்வதேச டி-20 போட்டிக்கான கேப்டனாக ஹர்டிக் பாண்டிய இடம்பெற வேண்டுமென்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கூறுகையில் : “டி-20 போட்டிக்கான கேப்டனாக புதிய வீரர் இடம்பெற்றால் எந்த பாதிப்பும் இந்திய அணிக்கு வராது. ஏனென்றால் கிரிக்கெட் போட்டி அப்படி, அதாவது ஒரு வீரர் மூன்று விதமான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடுவது அவ்வளவு சுலபம் கிடையாது. ரோஹித் சர்மா ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டனாக வழிநடத்தி வருகிறார். அதனால் டி-20 போட்டிக்கான புதிய கேப்டனை அறிவித்தால் எந்த பிரச்சனையும் இருக்காது. அதுவும் ஹர்டிக் பாண்டிய இடம்பெற்றால் சிறப்பு தான்.”

“தோல்வியை கண்டு அப்படியே இருக்காமல் முன்னேறிக்கொண்டு செல்ல வேண்டும், அது தான் சரியான விஷயம். சரியான வீரர்களை தேர்வு செய்து பீல்டிங்-ல் சிறப்பாக செயல்பட வேண்டும். அதுமட்டுமின்றி, சரியான இளம் வீரர்களை தேர்வு செய்து பயமின்றி விளையாட வைக்க வேண்டும். அப்பொழுது சரியாக இருக்கும் என்று கூறியுள்ளார் ரவி சாஸ்திரி.”

டி-20 போட்டிக்கான கேப்டனாக ஹர்டிக் பாண்டிய இடம்பெற்றால் எப்படி இருக்கும் ? இந்திய அணிக்கு சிறந்த டி-20 கேப்டன் யார் ? உங்கள் கருத்து என்ன ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here