WCல் இந்திய அணியின் தோல்விக்கு இந்த இருவர் தான் காரணத்தை சொல்ல வேண்டும் ; முன்னாள் வீரர் ஆவேசம் ;

இன்னும் உலகக்கோப்பை பற்றிய பேச்சு தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அரையிறுதி சுற்றில் இருந்து இந்திய கிரிக்கெட் அணி மோசமான நிலையில் வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதற்கு முன்பு நடைபெற்ற போட்டியில் தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, ஜிம்பாபே போன்ற அணிகளுக்கு எதிரான சீரியஸ் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி தொடரையும் வென்றுள்ளனர். ஆனால் உலகக்கோப்பை போட்டி என்று வந்தால் இந்திய அணி பலவீனமாக மாறிவிடுகிறதா ?

ஐசிசி டி-20 2022 உலகக்கோப்பை போட்டியின் லீக் சுற்றில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 5 போட்டியில் 4 போட்டி வெற்றிபெற்ற நிலையில் முதல் இடத்தில் இருந்தன. அதனால் அரையிறுதி சுற்றுக்கும் முன்னேறியது. பின்பு இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளும் அரையிறுதி சுற்றில் மோதின. அதில் இந்திய அணி 6 விக்கெட்டை இழந்த நிலையில் 168 ரன்களை அடித்தனர். பின்பு 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இங்கிலாந்து அணி.

எப்படியாவது விக்கெட்டை கைப்பற்றி பார்ட்னெர்ஷிப் அமையவிடாமல் தடுக்க இந்திய அணிக்கு அனைத்து முயற்சிகளையும் கையில் எடுத்தனர். ஆனால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. ஏனென்றால், ஒரு விக்கெட்டை கூட இழக்காத இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியுள்ளது இங்கிலாந்து. அதனால் ஒரு விக்கெட் கூட இந்திய அணியால் கைப்பற்ற முடியவில்லையா ? என்று இதுவரை யாரும் பார்த்திராத அளவிற்கு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்திய அணியின் தோல்விக்கு கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா பார்ட்னெஷிப் என்றும் புவனேஸ்வர் குமார், ஷமி, ரவிச்சந்திரன் அஸ்வின் பவுலிங் தான் என்று பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல தான் இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமத் கைப் கூறுகையில் :” இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் லெக்-ஸ்பின்னர் பவுலிங்-க்கு அதிக அளவில் முன்னுரிமை கொடுக்கப்பட்டது. ஐசிசி பவுலிங் தவரிசை பட்டியலில் கூட முதல் 10 இடங்களில் நான்கு அல்லது ஐந்து லெக் -ஸ்பின் பவுலர்கள் இடம்பெற்றுள்ளனர். அதுவும் ஆஸ்திரேலியாவில் வ்ரிஸ்ட் ஸ்பின் பவுலருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.”

“ஆனால் இந்திய அணியின் முன்னணி சுழல் பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹாலுக்கு வாய்ப்பு கொடுக்காதது பெரியதவறுதான். ஏன் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்று ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் தான் சரியான விளக்கத்தை கொடுக்க வேண்டும். கடந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் வருண் சக்கரவத்தி இடம்பெற்றார். அதற்கு முக்கியமான காரணம் அந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் அவர் சிறப்பாக விளையாடினார் என்று. எனக்கு தெரிந்து தேர்வாளர்கள் இப்படி தேர்வு செய்வது தான் மிகப்பெரிய தவறாக காணப்படுகிறது. சஹால் கடந்த ஆண்டு மட்டுமின்றி இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் விளையாடவில்லை என்று கூறியுள்ளார் முகமத் கைப்.”

உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் மோசமான தோல்விக்கு என்ன காரணமாக இருக்கும் ? உங்கள் கருத்து என்ன ?