கூடிய விரைவில் விராட்கோலி செய்தது போல தான் ரோஹித் சர்மா செய்ய போகிறார் ; முன்னாள் வீரர் உறுதி ; வருத்தத்தில் இருக்கும் மும்பை ரசிகர்கள் ;

0

நேற்று நடந்த 23வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற மும்பை பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 198 ரன்களை விளாசியது. பின்பு 199 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது மும்பை.

ஆனால் தோல்வி தான் காத்திருந்தது, ஆமாம், தொடக்கத்தில் சரியாக விளையாடாமல் இறுதி நேரத்தில் போராடினால் தோல்வி தான் கிடைக்கும் என்பதற்கு உதாரணம் தான் நேற்றைய போட்டி. இறுதி வரை போராடிய மும்பை இந்தியன்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை பெற்றுள்ளது.

நம்ம மும்பை இந்தியன்ஸ் அணியா இது ?

ஆமாம், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை மொத்தம் ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ளது மும்பை. ஆனால் அனைத்து ஐந்து போட்டிகளிலும் தோல்வியை பெற்று புள்ளிபட்டியலில் இறுதி இடத்தில் உள்ளது. இதுவரை ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி தான் அதிகபட்சமாக ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளனர்.

அப்படி இருக்கும் அணியால் இந்த முறை ஒரு போட்டியில் கூட வெல்ல முடியாதது கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி ஓப்பனிங் பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா சொல்லும் அளவிற்கு பெரிய அளவில் ரன்களை அடிக்கவில்லை. இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் கூறுகையில் ;

“இப்பொழுது இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியில் முக்கியமான அனுபவம் வாய்ந்த வீரர் என்றால் அது பொல்லார்ட் தான். அதனால் விராட்கோலி போல ஐபிஎல் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகி ஒரு பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடுவது தான் சரியாக இருக்கும்.”

“அதுமட்டுமின்றி, உலக கிரிக்கெட் போட்டிகளில் பொல்லார்ட் சிறந்த கேப்டன் என்பதில் சந்தேகமில்லை. எனக்கு தெரிந்து கடந்த 3 ஐபிஎல் சீசன் போட்டிகளில் ரோஹித் சர்மா பெரிய அளவில் விளையாடுவது இல்லை. ஒவ்வொரு போட்டியிலும் 30 ரன்களுக்குள் மட்டுமே அடித்து வந்துள்ளார்.”

“ஆனால் இந்திய அணியில் போதுமான அளவிற்கு உள்ளது. அதனால் ஷர்மாவுக்கு பதிலாக பொல்லார்ட் அணியின் கேப்டனாக இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும். அதுமட்டுமின்றி, பொல்லார்ட் போட்டி எந்த ஒரு மோசமான நிலையிலும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்துள்ளார் என்று கூறியுள்ளார் சஞ்சய் மஞ்சரேக்கர்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here