ரோஹித் சர்மா சொன்னது தவறு…! இவர் ஒன்றும் சிறந்த பவுலர் இல்லை ; ரோஹித் சர்மாவை பற்றி பேசிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷீத் லடிப் ; முழு விவரம் இதோ ;

கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் இந்தியா கிரிக்கெட் அணி 3 – 0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. பின்னர் அதனை தொடர்ந்து இப்பொழுது முதல் டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.

அதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸ்-ல் மட்டுமே 574 ரன்களை அடித்தனர். பின்னர் முதல் இன்னிங்ஸ் -ல் களமிறங்கிய இலங்கை அணி 174 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் இரண்டாவது இன்னிங்ஸ்-ல் களமிறங்கியது இலங்கை அணி அதிலும் 178 ரன்களை மட்டுமே அடித்தனர்.

அதனால் இந்திய கிரிக்கெட் அணி இரண்டாவது இன்னிங்ஸ்- விளையாடமல் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது இந்திய அணி. போட்டி முடிந்த பிறகு பேசிய ரோஹித் சர்மா (இந்திய அணியின் கேப்டன்) கூறுகையில் ; அஸ்வின் தான் எப்பொழுதும் சிறந்த பவுலர். நான் அவரை பல ஆண்டுகளாக கவனித்து கொண்டே வருகிறேன்.

அவ்வப்போது சில போட்டிகளில் வெற்றிபெருவதற்கு முக்கியமான காரணமாக இருந்துள்ளார் அஸ்வின் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா. இதனை தவறு என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ரஷீத் லடிப் கூறியுள்ளார். மேலும் இதனை பற்றி பேசிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் ;

அஸ்வின் சிறந்த பவுலர் தான் அதில் மாற்றம் இல்லை. பவுலிங்கில் பல மாற்றத்தை கொண்டு வந்துள்ளார் அஸ்வின். இந்திய கிரிக்கெட் அணியில் அவர் (ரவிச்சந்திரன் அஸ்வின்) தான் சிறந்த பவுலர் அதில் மாற்றம் இல்லை. அனில் கும்ளே சிறந்த பவுலர், அதேபோல தான் ரவீந்திர ஜடேஜாவும் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்தனர்.

இந்திய அணியில் அதுவும் இந்தியாவில் நடக்கும் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார் ரவிச்சந்திரன் அஸ்வின். ஆனால் வெளிநாடுகளில் அஸ்வின் சிறப்பாக விளையாடுவதே இல்லை என்பது தான் உண்மை. அதனால் ரோகித் சர்மா சொன்னதில் இது தவறு. ஆனால் அவர் சொன்னது சக கிரிக்கெட் வீரர்களை ஊக்கப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷீத் லடிப்.

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 61 ரன்களை அடித்து 6 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். வருகின்ற மார்ச் 12ஆம் தேதி முதல் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. அதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா ? அல்லது இலங்கை அணி வென்று ட்ரா செய்ய போகிறதா இலங்கை அணி??