சென்னை, மும்பை இல்லை ; ஐபிஎல் 2023 போட்டியில் இந்த அணி தான் பலமாக இருக்கிறது ; இர்பான் பதான் ஓபன் டாக் ;

ஐபிஎல் 2023 : ஐபிஎல் 2023 போட்டிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து நடைபெற உள்ளதாக பிசிசிஐ கூறியுள்ளது. இந்நிலையில், ஐபிஎல் 2023 போட்டிக்கான ஏலம் வருகின்ற டிசம்பர் 23ஆம் தேதி அன்று நடைபெற உள்ளதாக பிசிசிஐ தகவலை வெளியிட்டுள்ளது.

அதனால் எந்த எந்த அணிகளும் யார் இடம்பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான டி-20 தொடர்கள் இந்தியாவில் அறிமுகம் ஆனது. பின்பு டி-20 போட்டி என்றதால் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனால் இப்பொழுது ஆண்டுதோறும் தவறாமல் நடைபெற்று வருகிறது. இதுவரை மொத்தம் 15 சீசன்கள் நடைபெற்று முடிந்துள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி :

ஐபிஎல் போட்டிகளில் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் ஒரே அணி தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. கடந்து ஐபிஎல் 2022க்கு முன்புவரை விராட்கோலி தான் கேப்டனாக வழிநடத்தினார். பின்பு, இந்திய கிரிக்கெட் அணியிலும் கேப்டன் பதவியில் இருந்த விராட்கோலி, அதேநேரத்தில் ஐபிஎல் போட்டிகளிலும் நான் கேப்டனாக இருக்கப்போவதில்லை என்று அவரே அறிவித்தார்.

அதனை அடுத்து இப்பொழுது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக தென்னாபிரிக்கா வீரர் டூப்ளஸிஸ் தலைமை தாங்கி வழிநடத்தி வருகிறார். இதுவரை நடந்து முடிந்த 15 சீசன்களில் மூன்று முறை இறுதி போட்டிவரை சென்று தோல்வியை பெற்றுள்ளது பெங்களூர் அணி. ஆனால் கடந்த ஆண்டில் இருந்து பெங்களூர் அணியின் முன்னேற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் கூறுகையில் : “எனக்கு தெரிந்து இந்த வருடம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சிறப்பாக இருக்கிறது. ஏனென்றால் சிறப்பான தொடக்க வீரர்கள் உள்ளனர். அதுமட்டுமின்றி, விராட்கோலி மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். அதே சமையத்தில் ஆல் – ரவுண்டரான மேக்ஸ்வெல், ஷாபாஸ், லொம்ரோர், ஹசார்ங்க போன்ற சிறப்பான வீரர்கள் இருக்கின்றனர். அதே நேரத்தில் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷல் பட்டேல், முகமத் சிராஜ் மற்றும் ஹேசல்வுட் போன்ற வீரர்கள் அணியில் இருப்பதால் இந்த முறை கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ளார் இர்பான் பதான்.”