இந்த இரண்டு இந்திய வீரர்களுக்கு விராட்கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியது ரொம்ப சந்தோசம் ; முன்னாள் பாகிஸ்தான் வீரர் அதிரடி கருத்து ;

ஐயோ…! தினம்தோறும் விராட்கோலி பற்றிய பேச்சுதான் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஆமாம் கடந்த ஆண்டு இறுதியில் அவர் (விராட்கோலி) ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு நான் டி-20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு தொடங்கியது சர்ச்சை.

ஆமாம்… அதன்பின்னர் பிசிசிஐ-யின் அதிரடி முடிவால் விராட்கோலியை ஒருநாள் கிப்டான் பதவியில் இருந்தும் வெளியேற்றியுள்ளனர். அதனால் விராட்கோலி மிகவும் மன உளைச்சலுக்கு ஆள் ஆகியுள்ளார். அதன்பிறகு டெஸ்ட் போட்டிக்கு மட்டும் விராட்கோலியை கேப்டனாக இருப்பர் என்றும் பிசிசிஐ கூறியது.

ஆனால் அதையும் நீண்ட நாள் வைத்திருக்கவில்லை. ஆமாம் , இரு தினங்களுக்கு முன்பு தான் தென்னாபிரிக்கா அணிக்கு இடையேயான தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்த நிலையில், நான் டெஸ்ட் போட்டிக்கான பதவியில் இருந்தும் விலகப்போவதாக அவரே அறிவித்தார்.

அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் முழ்கியுள்ளனர். அதுமட்டுமின்றி, அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கிடையே பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விராட்கோலி டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகியதை பற்றி அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல, தான் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ரஷீத் லதீப் அவரது கருத்தை கூறியுள்ளார். விராட்கோலியின் டெஸ்ட் போட்டியின் கேப்டன்ஷிப் பற்றி கூறுகையில் ; விராட்கோலி ஒரு உலக கிரிக்கெட் நட்சத்திரம். அடுத்த கேப்டன் யார் ? ரோஹித் சர்மா பிட்னெஸ் இல்லை, அதுமட்டுமின்றி தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான எந்த போட்டியிலும் ரோஹித் சர்மா விளையாடவில்லை.

கே.எல்.ராகுலுக்கு இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்தும் அளவிற்கு பக்குவம் இல்லை. அதுமட்டுமின்றி, விராட்கோலியின் சக வீரர்களை பற்றி என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. விராட்கோலி கிப்டான் பதவியில் இருட்னது விலகியது மற்ற வீரர்கள் என்ன செய்கிறார்கள் என்று நான் கவனித்தேன்.

அதில் ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவரும் அதனை ஒப்புக்கொண்டனர். ஆமாம், அவர்கள் எப்பொழுது விராட்கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகுவார் என்று எதிர்பார்த்து கொண்டு இருப்பார்கள் போல. இந்திய கிரிக்கெட், விராட்கோலி மற்றும் கங்குலி -க்கு இடையே என்னதான் நடக்கிறது ?

விராட்கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதற்கு காரணம், கங்குலி அல்லது மற்ற இந்திய கிரிக்கெட் வீரர்களால் இந்திய அணியை வழிநடத்தவே முடியாது என்பது தான் ஒரே காரணம் என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வீரரான ரஷீத் லதீப்.