இந்திய அணியில் இவர் தான் நம்பர்: 1 வீரர் ! வேறு என்ன பிரச்னை ? இந்திய அணியின் வீரர் முன்னாள் வீரர் முகமது அஷாருதீன் பேட்டி ;

நாளை மதியம் 2 மணியளவில் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணியும் மற்றும் தெம்பா பவுமா தலைமையிலான தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளனர். அதனால் இரு அணிகளும் பலமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரு தினங்களுக்கு முன்பு தான் இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு இடையேயான டெஸ்ட் தொடர் போட்டிகள் முடிந்துள்ளது. அதில் 2 – 1 கணக்கில் தென்னாபிரிக்கா அணி முன்னிலையில் காரணத்தால் தொடரை கைப்பற்றியது. அதில் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது.

அதனை தாங்க முடியாமல் நான் டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக போவதாக விராட்கோலியே அறிவித்தார். அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி, அடுத்த டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது அஷாருதீன் அளித்த பேட்டியில் விராட்கோலியை பற்றி கூறியுள்ளார். அதில் பேசிய அஷாருதீன் ; ரோஹித் சர்மா தான் நம்பர் : 1 வீரர் என்றால், வேறு என்ன பிரச்னை ? அடுத்த கேப்டனாக வரப்போகும் வீரர் 5-6 ஆண்டுகளை பற்றி யோசிக்கலாம், உடனடியாக ஒரு வீரரை தேர்வு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆனால் அதற்கு அனுபவம் இல்லாத வீரர்களை கேப்டனாக நியமனம் செய்ய முடியாது. ஆனால் ரோஹித் ஷர்மாவின் பிட்னெஸ் டெஸ்ட் பற்றி பேசிய அவர் ; எனக்கு தெரிந்து ரோஹித் சர்மா சிறந்த வீரர் தான், அவர் டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாக கூட வரலாம்.

ரோஹித் சர்மா இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவார், அல்லது அதற்கு மேலும் விளையாட அதிக வாய்ப்புள்ளது. ஆனால் அவருடைய பிட்னெஸ் தான் இப்பொழுது கேள்வி குறியாகியுள்ளது. ஆமாம்…! சமீப காலமாக அவருக்கு தொடை தசை பிடிப்பு பிரச்னை அடிக்கடி வந்துகொண்டே தான் இருக்கிறது.

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் (ரோஹித் சர்மா) இல்லாதது எதிர் அணிக்கு சாதகமாக மாறிவிட்டது. ஏனென்றால் அவர் ஒரு அதிரடியான வீரர், சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேனும் கூட, என்னதான் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளேன், அதனால் என்னுடைய கணக்கு படி ரோஹித் சர்மா தான் அடுத்த டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது
அஷாருதீன்.