நேற்று நடந்த 38வது போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.
இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 187 ரன்களை அடித்தனர். அதில் மயங்க் அகர்வால் 18, தவான் 88, ராஜபக்ச 42, லிவிங்ஸ்டன் 19, பரிஸ்டோவ் 6 ரன்களை அடித்தனர்.
பின்னர் 188 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஆனால், எப்பையும் போல தொடக்க ஆட்டம் சரியாக அமையவில்லை. அதனால் தொடர்ந்து நான்கு விக்கெட்டை இழந்தது சென்னை அணி. இருப்பினும் ராயுடுவின் அதிரடியான ஆட்டத்தால் சென்னை அணி வெற்றி பாதைக்கு சென்றது.
ஆனால் இறுதி நேரத்தில் ஒருவர் பின் ஒருவராக ஆட்டம் இழந்த காரணத்தால் சென்னை அணியால் 20 ஓவர் முடிவில் 176 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதனால் 11 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி. இதனை பற்றி பேசிய சென்னை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா கூறுகையில் ;
“பவுலிங் செய்ய தொடங்கிய போது சிறப்பாக தான் தொடங்கினோம். ஆனால் அதிலும் இறுதி நேரத்தில் 15 ரன்களை தேவையின்றி கொடுத்துள்ளதாக தான் நான் நினைக்கிறன். அதுமட்டுமின்றி, நாங்க என்ன யோசனை செய்தோமோ, அதனை சரியாக செய்யவில்லை.”
“ஆனால் ராயுடு மிகவும் அருமையாக பேட்டிங் செய்தார், நான் அப்பொழுதே அனைவரிடமும் சொன்னேன், 175 ரன்களுக்குள் அவர்களை மடக்கினால், வெற்றிக்கான வாய்ப்பு இருக்கும் என்று. அதுமட்டுமின்றி, பேட்டிங் செய்த போதும் முதல் 6 ஓவர் சரியாக அமையவில்லை.”
“எனக்கு தெரிந்து அங்கு தான் பிரச்சனையே உள்ளது என்று கூறியுள்ளார் ரவீந்திர ஜடேஜா.” சென்னை அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு சென்னை அணி தகுதி பெறுமா இல்லையா ?
உங்கள் கருத்துக்களை இங்கு வரவேற்க படுகின்றனர். அதனால் கீழே உள்ள COMMENTS உங்கள் கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யுங்கள்….!