ஐபிஎல் டி-20 2022 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழ்நிலையில், இதுவரை 37 போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. அதிலும் சென்னை அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 2 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 9வது இடத்தில் உள்ளது சென்னை அணி.
இன்று இரவு 7:30 மணியளவில் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாட உள்ளனர்.
இதுவரை இந்த இரு அணிகளும் 26 போட்டிகளில் நேருக்கு நேர் விளையாடியுள்ளது. அதில் சென்னை அணி அதிகபட்சமாக 15 போட்டிகளிலும், பஞ்சாப் அணி 11 போட்டிகளிலும் வென்றுள்ளது. அதுமட்டுமின்றி, கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெற்ற 11வது போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின.
அதில் பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது. அதனால் நிச்சியமாக இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சென்னை அணியை தோனிக்கு பிறகு ரவீந்திர ஜடேஜா சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.
என்னதான் முதல் சில போட்டிகளில் தோல்வியை பெற்றாலும், அதில் இருந்த தவறுகளை சரி செய்து கொண்டு வருகிறார் ரவீந்திர ஜடேஜா. இதனை பற்றி பேசிய சென்னை அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பதி ராயுடு கூறுகையில் ; ” தோனியின் இடத்தை இவரால் நிச்சியமாக பூர்த்தி செய்யவே முடியாது.”
“தோனி செய்த விஷயங்களை அனைத்து ஜடேஜாவால் நிச்சியமாக செய்ய முடியாது. அது நடக்க போவதும் இல்லை. ஆனால் நிச்சியமாக ஜடேஜா, தோனியிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக்கொண்டு வருகிறார். அதுவும் தோனி மைதானத்தில் இருப்பதால் ரவீந்திர ஜடேஜாவுக்கு சுலபமாக உள்ளது.”
“நிச்சியமாக இன்னும் சிறப்பாக சென்னை அணியை வழிநடத்துவார். சென்னை அணியை மட்டுமின்றி இந்திய கிரிக்கெட் அணியையும் வழிநடத்துவார். எனக்கு தெரிந்து இப்பொழுது சென்னை அணியில் இளம் வீரர்கள் உள்ளனர். அதுமட்டுமின்றி இன்னும் ஆண்டுகள் போக போக நிச்சியமாக சிஎஸ்கே அணியில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் இருக்கும்.”
“இளம் கேப்டனாக ஜடேஜா சென்னை அணியை வழிநடத்தும் போது, இளம் வீரர்களுக்கு நம்பிக்கையாகவும் பல விஷயங்களை கற்றுக்கொள்ளவும் முடியும். அனைவரும் ஜடேஜாவின் கேப்டன் பதவியை ஆதரித்து கொண்டு வருகின்றனர். எனக்கு தெரிந்து ரவீந்திர ஜடேஜா சரியான பாதையில் தான் சென்று கொண்டு இருக்கிறார் என்று கூறியுள்ளார் அம்பதி ராயுடு.”
இனிவரும் போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற்றால் நிச்சியமாக ப்ளே – ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை யாராலும் தடுக்கவே முடியாது. இனிவரும் போட்டிகளில் சென்னை அணி வெல்லுமா ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!