உலகக்கோப்பை போட்டியில் தோனிக்கு பதிலாக நான் தான் கேப்டனாக இருந்திருக்க வேண்டும் ; சிக்ஸர் மன்னன் வருத்தம் ;

0

2007ஆம் உலகக்கோப்பை போட்டியில் நான் தான் கேப்டனாக இருந்திருக்க வேண்டும். ஆனால், இயன் சாப்பெல் செய்த செயலால் நான் அதனை இழந்துவிட்டேன் ; சிக்ஸர் மன்னன் வருத்தம்.

இந்திய கிரிக்கெட் அணி :

இந்திய கிரிக்கெட் அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. சௌரவ் கங்குலி-க்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியை சிறப்பாக வழிநடத்தி வந்துள்ளார் மகேந்திர சிங் டோனி. தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அனைத்து விதமான ஐசிசி கோப்பைகளையும் பெற்றுள்ளது.

யுவராஜ் சிங் :

இடது கை பேட்ஸ்மேனான யுவ்ராஜ் சிங் கடந்த 2000ஆம் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து சிறப்பாக விளையாடி வந்துள்ளார். இதுவரை 40 டெஸ்ட் போட்டிகளில் 1900 ரன்களையும், 304 ஒருநாள் போட்டிகளில் 8701 ரன்களையும், 58 டி-20 போட்டிகளில் 1177 ரன்களையும் அடித்துள்ளார்.

பின்பு 2017ஆம் ஆண்டு சரவதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகினார் யுவ்ராஜ் சிங். ஆனால் ஐபிஎல் போட்டிகளில் 2019ஆம் ஆண்டு வரை விளையாடியுள்ளார் யுவ்ராஜ் சிங். அவர் இறுதியாக 2019ஆம் ஆண்டு விளையாடிய அணி மும்பை இந்தியன்ஸ் அணியாகும்.

யுவ்ராஜ் சிங் வருத்தம் :

“2007ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் நான் தான் கேப்டனாக இருக்க வேண்டியது. அப்பொழுது தான் கிரெக் சாப்பெல் -க்கு ஒரு பிரச்சனை நடந்தது. அதில் சாப்பெல் ஆ? அல்லது சச்சின் டெண்டுல்கரா ஆ ?? என்று. அப்பொழுது நான் என்னுடைய அணி உறுப்பினருக்கு ஆதரவாக இருந்தேன்.”

“ஆனால் அது பிசிசிஐ உறுப்பினர்கள் சிலருக்கு அது பிடிக்கவில்லை. அப்பொழுது யாரை வேண்டுமானலும் கேப்டனாக ஆனால் என்னை தவிர்த்து என்று அவரகள் சொன்னதை நான் கேட்டான். அப்பொழுது நான் துணை கேப்டன் பதவியில் இருந்தும் விலகினேன்.”

“அந்த நேரத்தில் சேவாக் அணியில் இல்லை. பின்பு தோனி தான் இந்திய அணியின் கேப்டன் 2007ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியை வழிநடத்துவார் என்று அவர்கள் கூறினார்கள். ஆனால் நான் தான் கேப்டனாக இருப்பேன் என்று நினைத்தேன். அதுமட்டுமின்றி, அந்த நேரத்தில் சேவாக் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிகளில் விளையாடவில்லை.”

“அப்பொழுது நான் துணை கேப்டனாகவும், ராகுல் டிராவிட் இந்திய அணியின் கேப்டனாகவும் விளையாடி வந்தோம். அப்பொழுது நான் தான் கேப்டனாக இருப்பேன் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் எனக்கு எதிராக முடிவுகளை எடுத்தனர். அதனால் எனக்கு ஒருதுளி வருத்தம் இல்லை என்று கூறியுள்ளார் யுவ்ராஜ் சிங்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here