இப்படி நடந்தால் நிச்சியமாக ஒரு திறமையான வீரர் கூட இந்தியாவுக்கு கிடைக்காது ; கடுப்பாக பேசினார் யுவ்ராஜ் சிங் பேட்டி ;

இந்திய கிரிக்கெட் அணி:

உலக கிரிக்கெட் போட்டிகளில் டாப் இடத்தில் உள்ளது இந்திய கிரிக்கெட் அணி என்பது தான் உண்மை. இந்திய கிரிக்கெட் அணியில் அதிக திறமையான வீரர்கள் இருந்தும் கடந்த ஆண்டு ஐபிஎல் 2021யின் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி மிகவும் மோசமான நிலையில் போட்டிகளில் இருந்து வெளியேறியது.

இளம் வீரர்களுக்கான வாய்ப்பு :

இந்திய கிரிக்கெட் அணியில் அவ்வப்போது இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்து கொண்டு தான் வருகிறது. அதிலும் ஒரு இளம் அல்லது புதிய வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடினால் நிச்சியமாக இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கிடைத்துவிடும்.

அதனால் இளம் வீரர்கள் 50 ஓவர் மற்றும் டெஸ்ட் பேட்டிகளில் விளையாடுவதை விட ஐபிஎல் போட்டிகளில் விளையாடவே அதிக அளவில் ஆர்வத்தை காட்டி வருகின்றனர்.

யுவராஜ் சிங் பேட்டி :

இந்திய கிரிக்கெட் அணி மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் பேசிய யுவ்ராஜ் சிங் கூறுகையில் ; “இப்பொழுது இருக்கும் வீரர்களுக்கு குறுகிய ஓவர் (20 ஓவர்) போட்டிகளில் தான் விளையாட ஆர்வமாக உள்ளனர். அதனால் டெஸ்ட் போட்டிகள் இறந்து கொண்டு வருகிறது.”

“ஏனென்றால் கிரிக்கெட் ரசிகர்களும் இப்பொழுதெல்லாம் டி-20 போட்டிகளை மட்டுமே பார்க்க ஆர்வமாக உள்ளனர். அதுமட்டுமின்றி, இப்பொழுதெல்லாம் 5 நாட்கள் டெஸ்ட் போட்டிகள் விளையாடி 5 லட்சம் வாங்குவதை விட, இப்பொழுதெல்லாம் டி-20 போட்டிகளில் விளையாடி 50 லட்சம் வாங்குவதை மட்டுமே ஆர்வமாக கொண்டுள்ளனர்.

“அதுமட்டுமின்றி, சர்வதேச போட்டிகளில் விளையாடாதவர்கள் கூட 7 அல்லது 10 கோடி சம்பாரித்து கொண்டு இருக்கின்றனர். அனைத்து சர்வதேச அணிகளிலும் அவரவர் உள்ளூர் விளையாட்டு போட்டிகள் நடத்தி வருகின்றனர். அதில் உலக அளவில் புகழ் பெற்ற போட்டியாக திகழ்கிறது ஐபிஎல்” என்று கூறியுள்ளார் யுவ்ராஜ் சிங்.

கிரிக்கெட் ரசிகர்களே..! நீங்க சொல்லுங்க ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருவதால் இந்திய அணியில் சரியாக விளையாடுவது இல்லையா ?? அதனால் தான் கடந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடவில்லையா ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!