ருதுராஜ் இல்லை ; CSK அணியின் எதிர்காலமே இவங்க நான்கு வீரர்கள் ; அதில் மாற்றமே இல்லை ; தோனி ஓபன் டாக்

0

ஐபிஎல்:

ஐபிஎல் போட்டிகள் கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனது. அதில் இருந்து இப்பொழுது வரை சிறப்பாக நடைபெற்று வருகிறது ஐபிஎல் டி-20 போட்டிகள். அதிலும் இதுவரை வெற்றிகரமாக 14ஆண்டுகள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :

கடந்த 2008ஆம் ஆண்டு முதல், அதாவது ஐபிஎல் அறிமுகம் ஆன காலத்தில் இருந்து கடந்த ஆண்டு வரை மகேந்திர சிங் தோனி தான் அணியை சிறப்பாக வழிநடத்தி வந்தார். பின்பு இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜடேஜா கேப்டனாக பொறுப்பேற்று விளையாடி வந்தார்.

ஆனால் சென்னை அணி மற்றுமின்றி ஜடேஜாவின் விளையாடும் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது தான் உண்மை. அதனால் மறுபடியும் கேப்டனாக மாறினார் தோனி. இதுவரை தோனி தலைமையிலான சென்னை அணி 11 முறை ப்ளே – ஆஃப் சுற்றுக்கும், நான்கு முறை கோப்பையையும் பெற்றுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2022:

இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மோசமான ஆண்டாக மாறியுள்ளது தான் உண்மை. ஏனென்றால் இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் வெறும் 4 போட்டிகளில் வென்று புள்ளிபட்டியலில் 9வது இடத்தில் உள்ளது சென்னை அணி. இதற்குமேல் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா இல்லையா ?? என்று கேட்டால் அது சந்தேகம் தான்.

தோனி பேட்டி : நேற்று ஒரு மேடையில் பேட்டி அளித்த சென்னை அணியின் கேப்டன் தல தோனி கூறுகையில் ; சென்னை வீர்ரகளுக்கு சில முக்கியமான குறிப்புகளை தெரிவித்துள்ளார். அதில் இனிவரும் போட்டிகளில் வென்று ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியுமா ? இல்லையா ?? என்பதை நினைத்து விளையாட வேண்டாம்.

எதனை பற்றியும் யோசிக்காமல் இனிவரும் போட்டிகளை அவரவர் திறமையை சரியாக வெளிப்படுத்த வேண்டும் என்பதை தான் யோசிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, சென்னை அணியின் டேவன் கான்வே, ஷிவம் துபே, தீக்சஹானா, முகேஷ் சவுத்திரி போன்ற நான்கு வீரர்கள் தான் சென்னை அணியின் எதிர்காலமே என்று கூறியுள்ளார் தோனி.

மேலும் சென்னை அணியின் நிர்வாகத்தை பற்றிப்பேசிய தோனி ; சென்னை அணி நிர்வாகம் எடுக்கும் அனைத்து முடிவுகளும் தற்காலிக பிரச்சனைக்கான தீர்வாக இருக்காது. அவர்கள் எப்பொழுதும் எதிர்காலத்தை பற்றி யோசனை செய்துதான் முடிவுகளை கையில் எடுப்பார்கள் என்று கூறியுள்ளார் மகேந்திர சிங் தோனி.

கிரிக்கெட் ரசிகர்களே..! நீங்க சொல்லுங்க இனிவரும் போட்டிகளில் சென்னை அணி வெற்றிபெறுமா ?? அப்படி வெற்றி பெற்றால் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா ?? உங்கள் கருத்துக்கள் இங்கு வரவேற்க படுகிறது. அதனால் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here