ஐபிஎல் ரசிகர்களே தயாராக இருக்கீங்களா ?? இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது ஐபிஎல் 2022 போட்டிகள். அதுமட்டுமின்றி இந்த முறை ஐபிஎல் டி-20 2022 போட்டிகள் புதிதாக இரு புதிய அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. அதனால் விறுவிறுப்பான போட்டிக்கு நிச்சியமாக பஞ்சம் இருக்காது.
ஐபிஎல் போட்டி வந்துவிட்டாலே அவரவர் கருத்துகளை தெரிவிப்பது வழக்கம். அதில் மகேந்திர சிங் தோனியை பற்றி இளம் வீரர்கள் அவரவர் கருத்துக்களை கூறி வருகின்றனர். அதேபோல இந்திய அணியின் இளம் வீரரான சேட்டன் சக்கரியா சமீபத்தில் அளித்த பேட்டியில் ;
“நான் ஐபிஎல் போட்டிகளில் தோனியின் விக்கெட்டை கைப்பற்றியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஏனென்றால் கிரிக்கெட் விளையாட்டில் ஜாம்பவானாக திகழும் தோனி விக்கெட்டை அதுவும் நான் அறிமுகம் ஆன முதல் போட்டியில் கைப்பற்றியது எனக்கு மிகப்பெரிய சந்தோசம்.”
“ஐபிஎல் போட்டிகளில் நான் வலை பயிற்சியில் மேற்கொள்ளும்போது டிவில்லியர்ஸ் -க்கு பவுலிங் செய்துள்ளேன். ஆனால் அவரை நான் போட்டியில் எதிர்கொண்டது இல்லை, அவர் (டிவில்லியர்ஸ்) இப்பொழுது ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதனால் அவரது விக்கெட்டை இனி கைப்பற்ற முடியாது.”
“இன்னும் மீதமுள்ள ஒரே ஆல் விராட்கோலி தான், இந்த ஆண்டு ஐபிஎல் 2022 போட்டியில் எப்படியாவது நான் விராட்கோலி விக்கெட்டை கைப்பற்றுவேன் என்று கூறியுள்ளார் சேட்டன் சக்கரியா.
சேட்டன் சக்கரியா கடந்த ஆண்டு ஐபிஎல் டி-20 2021 போட்டியில் தான் அறிமுகம் ஆனார். பின்னர் இந்த ஆண்டு நடந்த மெகா ஏலத்தில் 4.2 கோடி விலை கொடுத்து டெல்லி கேபிட்டல்ஸ் அணி கைப்பற்றியுள்ளது. கடந்த ஆண்டு 2021 போட்டியில் மொத்தம் 14 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் சேட்டன் சக்கரியா.
அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இந்திய மற்றும் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் அறிமுகமாகியுள்ளார் சேட்டன் சக்கரியா..! கிரிக்கெட் ரசிகர்களே இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் தோனி கேப்டனாக மட்டும் இருக்க போகிறாரா ?? அல்லது பினிஷர் ஆக மாஸ் காட்டுவாரா ?? உங்கள் கருத்து என்ன ?