ஒட்டுமொத்தமா இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் இவரை எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர் ; ரவி சாஸ்திரி ஓபன் டாக் ;

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐபிஎல் டி-20 போட்டிகள் வருகின்ற மார்ச் 26ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. அதுமட்டுமின்றி இந்த முறை 10 அணிகளை கொண்டு விளையாட உள்ளதால் விறுவிறுப்பான போட்டிக்கு நிச்சியமாக பஞ்சம் இருக்காது.

இந்த ஆண்டு புதிய அணியான குஜராத் அணியை ஹார்டிக் பாண்டியாவும் , லக்னோ அணியை கே.எல்.ராகுலும் வழிநடத்த உள்ளனர். என்னது ஹார்டிக் பாண்டியவா ?? கடந்த ஐசிசி உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு எங்கு சென்றார் ஹார்டிக் என்று கேள்வி தான் எழுந்தது.

ஏனென்றால் ஐசிசி டி- 20 2022 போட்டிக்கு பிறகு எந்த போட்டியிலும் விளையாடாமல் இருந்தார். அதற்கு முக்கியமான காரணம் அவரால் சரியாக பவுலிங் செய்யவில்லை என்பது தான். ஹர்டிக் ஒரு பவுலிங் – ஆல் ரவுண்டர். அதனால் அவரது பவுலிங் சமீப காலமாக சொல்லும் அளவிற்கு இல்லை என்பதே உண்மை.

அதனை சரி செய்ய வேண்டும் என்னை வருகின்ற சீரியஸ் போட்டிகளில் என்னை தேர்வு செய்ய வேண்டாம் என்று ஹர்டிக் பாண்டிய கூறியுள்ளார். அதனால் ஹார்டிக் பந்தியாவின் ஆட்டத்தை இந்த ஆண்டு ஐபிஎல் டி-20 2022 போட்டிகளில் பார்க்க ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

இதனை பற்றி பேசிய இந்திய முன்னாள் வீரர் மற்றும் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கூறுகையில் ; ஒட்டுமொத்த இந்தியாவும் ஹர்டிக் பாண்டிய எந்த மாதிரி ஐபிஎல் 2022 யில் விளையாட போகிறார் என்பதை பார்க்க ஆவலோடு இருக்கின்றனர். அவரால் என்ன முடியும் என்று நம் அனைவருக்கும் நன்கு தெரியும்.

ஹார்டிக் பாண்டியவை போலவே பல இளம் வீரர்கள் இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பதற்காக வழியில் காத்துக்கொண்டு இருக்கின்றனர் என்று கூறியுள்ளார் ரவி சாஸ்திரி.

மேலும் இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் என்பதை பற்றி பேசிய ரவி சாஸ்திரி கூறுகையில் ; விராட்கோலி இனி கேப்டன்க இருக்க முடியாது. இப்பொழுது ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். இருப்பினும் அடுத்த கேப்டன் யார் என்று கேட்டால் ?

அதில் ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பண்ட், கே.எல்.ராகுல் போன்ற வீரர்கள் உள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு நிரந்திரமான கேப்டனை தேடி வருகின்றனர். இந்த ஐபிஎல் போட்டியை பயன்படுத்தி அதனை சுலபமாக கண்டுபிடித்து விடலாம். யார் எப்பொழுதும் இந்திய அணியில் இடம்பெறுவார்கள் என்று தெரியாது.

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் வெறும் 9 போட்டிகளில் விளையாடிய வெங்கடேஷ் ஐயர் ரன்களை அடித்து தொம்சம் செய்தார். அதனால் அவர் இந்திய அணியிலும் இடம்பெற்றுள்ளார். அதனால் எதிர்பார்க்காத நிறைய விஷயங்களை எதிர்பார்க்கலாம் என்பதற்கு இதுவே உதாரணம் என்று கூறியுள்ளார் ரவி சாஸ்திரி.