நான் ஒரு தோல்வியடைந்த கேப்டன் ; மனம் திறந்து பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ; ரசிகர்கள் வருத்தம் ;

0

இந்திய கிரிக்கெட் அணி இப்பொழுது அனைத்து விதமான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஆனால் டி-20 உலகக்கோப்பை, ஒருநாள் போட்டிகளிலும் மட்டும் மோசமான நிலையில் இந்திய அணி வெளியேறி வருகின்றனர்.

அதற்கு இந்தியா அணியின் கேப்டன் தான் காரணம் ?

அனைத்து விதமான கோப்பைகளையும் பெற்று கொடுத்த கேப்டனாக திகழ்கிறார் மகேந்திர சிங் தோனி. அதன்பிறகு விராட்கோலி கேப்டனாக விளையாடினார். ஆனால் விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி எந்த விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்றதில்லை.

அதனால் விராட்கோலி ஒரு ராசி இல்லாத கேப்டன் என்று பலர் அவரவர் கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர். அதுமட்டுமின்றி, இந்த அழுத்தம் காரணமாக போட்டிகளிலும் விராட்கோலியின் பங்களிப்பு பெரிய அளவில் இல்லை.

அதனால் அவரே (விராட்கோலி) டி-20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகினார். பின்பு அனைத்து விதமான கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட்கோலி இப்பொழுதும் ஒரு வீரராக சிறப்பாக விளையாடி வருகிறார்.

அதுமட்டுமின்றி, ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை சாம்பியன் படத்தை வென்றுள்ளது. அதனால் நிச்சியமாக ரோஹித் சர்மா உலகக்கோப்பையை வென்று கொடுப்பார் என்று நினைத்தனர்.

ஆனால் ஏமாற்றம் தான் மிஞ்சியது. அதனால் கேப்டனை வைத்து இந்திய அணி வென்று விடும் அல்லது தோல்வி பெரும் என்று கணிப்பது சரியான விஷயம் கிடையாது. விராட்கோலியின் பங்களிப்பு இப்பொழுது இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது.

கேப்டன் பற்றி பேசிய விராட்கோலி கூறுகையில் : “நாங்க 2017ஆம் ஆண்டு சாம்பியன் கோப்பையில் இறுதி போட்டி வரை சென்றோம், 2019ஆம் ஆண்டு அரையிறுதி வரை உலகக்கோப்பை போட்டியில் விளையாடினோம், அதுமட்டுமின்றி கடந்த டெஸ்ட் உலகசாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிவரை சென்றோம், அதுமட்டுமின்றி தொடர்ந்து ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் வென்றுள்ளோம்.”

“ஆனால் நான் ஒரு தோல்விபெற்ற கேப்டனாக தான் இருக்கிறேன், என்று விராட்கோலி வருத்தமாக கூறியுள்ளார்.”

ரசிகர்களுக்கு கேள்வி ?

விராட்கோலி ஒரு கேப்டனாக விளையாடியதில் என்ன தவறு நடந்தது ? விராட்கோலியை காட்டிலும் ரோஹித் சர்மா சிறந்த கேப்டனாக இடம்பெற்றது சரியான விஷயம் ஆ ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here