ரிஷாப் இல்லை ; நான்தான் பெஸ்ட் விக்கெட் கீப்பர் என்று ரோஹித் சர்மாவே சொல்லிவிட்டாரு ; சந்தோஷத்தில் விக்கெட் கீப்பர்

கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் தொடங்கியது இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு டெஸ்ட் போட்டிக்கான தொடர். இதுவரை நடந்து முடிந்த இரு போட்டிகளிலும் இந்திய அணி வென்றுள்ளது.

இதனை அடுத்து நாளை மறுநாள் இண்டோரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது. அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

ரிஷாப் பண்ட் :

முன்னணி வீரரான மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணியின் விக்கெட் கீப்பராக அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாடி வருகிறார் ரிஷாப் பண்ட். ஆனால் சமீப காலமாகவே அவரது பங்களிப்பு இந்திய அணிக்கு பெரிய அளவில் பயனுள்ளதாக இல்லை.

அதனால் ரசிகர்கள் இடையே பல எதிர்ப்புகள் எழுந்தது. பின்பு அவருக்கு காரில் விபத்து ஏற்பட்ட காரணத்தால் குறைந்தது 18 மாதங்கள் அவரால் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாத நிலை உருவாகியுள்ளது.

இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் செய்து வருகிறார் பாரத். இஷான் கிஷனை காட்டிலும் பாரத் விக்கெட் கீப்பிங் சிறப்பாக இருப்பதால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் அறிமுகம் செய்துள்ளனர்.

சமீபத்தில் என்னை (பாரத்) பற்றி ரோஹித் சர்மா புகழ்ந்து பேசினார். அதில் ” ரோஹித் சர்மா என்னை 6வதாக பேட்டிங் செய்ய சொன்னார். அதற்கு ஏற்ப நான் தயாராக இருக்கிறேன். அதுமட்டுமின்றி நான் தான் DRS கணிப்பதில் சிறந்த வீரர் என்று கூறினார் ரோஹித் சர்மா.”

இளம் வீரரான இஷான் கிஷானுக்கு பல வாய்ப்புகள் கொடுத்ததும் அவ்வப்போது மட்டுமே சிறப்பாக விளையாடி வந்தார். அதுமட்டுமின்றி விக்கெட் கீப்பிங்-ல் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை. அதனால் பாரத்-க்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது…!

இப்பொழுது விளையாடி வரும் டெஸ்ட் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியில் பாரத் இடம்பெற்றது சிறந்த விஷயம் ஆ ? அல்லது வேறு யார் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் ?