என்னை பொறுத்தவரை இந்திய அணியின் சிறந்த பினிஷர் இவர் தான் ; ஒரு ஓவரில் 20 ரன்களை அடிப்பார் ; குமார சங்கக்கார ஓபன் டாக் ;

கிரிக்கெட் உலக்தில் பல வீரர்களின் கவனத்தை ஈர்த்தவர் மகேந்திர சிங் தோனி. கடந்த 2004ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகம் ஆகி, 2007ஆம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்று சிறப்பாக விளையாடி வந்துள்ளார்.

அதுமட்டுமின்றி, அனைத்து விதமான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி, தோனி தலைமையில் அனைத்து விதமான போட்டிகளிலும் இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்றுள்ளனர்.

அதேநேரத்தில் தோனி கடந்த 2020ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் வெறும் ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். ஆனால் இப்பொழுதும் பிட்னெஸ் வைத்து கொண்டு சிறப்பாக விளையாடி ரன்களை அடித்து வருகிறார்.

இப்பொழுதும் ஐபிஎல் தொடரிலும் இறுதி ஓவரில் விளையாடி நிச்சியமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற அதிக வாய்ப்பு இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஐபிஎல் போட்டிகள் அறிமுகம் ஆன காலத்தில் இருந்து சென்னை அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார் மகேந்திர சிங் தோனி.

தோனி மட்டும் தான் 15 சீசன்களில் கேப்டனாக விளையாடி பெருமையை பெற்றுள்ளார். தோனியை பற்றி இலங்கை அணியின் முன்னாள் வீரரான குமார சங்கக்கார சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

அதில் ” இறுதி ஓவரில் 8 அல்லது 10 ரன்களை அடிக்க வேண்டிய சூழல் வந்தால் என்னை நானே ஆதரித்து கொண்டு விளையாடி ரன்களை அடித்துவிடுவேன். ஆனால் தோனி மட்டும் விளையாடி சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை விளாசி குறைந்தது 15 அல்லது 20 ரன்களை ஒரே ஓவரில் அடித்து விடுவார் என்று கூறியுள்ளார் குமார சங்கக்கார.”

இந்த ஆண்டுடன் தோனி ஓய்வை அறிவித்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பினிஷராக யார் விளையாட போகிறார் ? அதுமட்டுமின்றி, அடுத்த கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய சூழ்நிலையில் தான் சென்னை அணி இருக்கிறது.