என்னிடம் 40 லட்சம் கொடுப்பதாகவும், முன்னாள் ஐபிஎல் மற்றும் தமிழக வீரர் ஓபன் டாக் ; முழு விவரம் இதோ ;

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு தான் ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் தான்.

இதுவரை 14 சீசன் ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு ஐபிஎல் 2022யில் இரு அணிகள் (லக்னோ மற்றும் அகமதாபாத் ) போன்ற இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. அதனால் புதிய அணிகளை தவிர்த்து மீதமுள்ள 8 அணிகளும் அதிகபட்சமாக நான்கு வீரர்களை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று பிசிசிஐ கூறியுள்ளது.

பின்னர் புதிய இரு அணிகளும் அதிகபட்சமாக மூன்று வீரர்களை தக்கவைத்துக்கொள்ளாமல் என்றும், அதில் ஒரு வெளிநாட்டு வீரர் மற்றும் இரு இந்திய வீரர் என்ற அடிப்படையில் வீரர்களை அணியில் கைப்பற்றலாம் என்றும் பிசிசிஐ கூறியுள்ளது.

இதற்கிடையில் தமிழக வீரர் மற்றும் 40 வயதான ராஜா கோபால் சதிஷ் சமீபத்தில் போலீஸ்-யிடம் தன்னை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்பு கொண்ட பின்னி ஆனந்த் 40 லட்சம் கொடுத்து போட்டியை பிக்ஸ் செய்ய சொன்னார் என்று புகார் அளித்துள்ளார்.

மேலும் பேசிய ராஜா கோபால், எனக்கு முன்னாள் இரு வீரர்கள் ஊழல் செய்ய பணத்தை பெற்றுள்ளதாக அவரே கூறியுள்ளார். சதீஷ் இதுவரை ரஞ்சி கோப்பைக்கான போட்டியில் தமிழக அணியிலும், மற்றும் ஐபிஎல் டி-20 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலும் விளையாடி வந்துள்ளார்.

இப்பொழுது தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டியில் செபாக் சூப்பர் கில்லிஸ் அணியில் விளையாடி வருகிறார் ராஜகோபால் சதிஷ். இதனை விசாரித்த போலீஸ், பணம் கொடுத்தப்பதாக ராஜகோபால் கூறியது உண்மை தான். அதனை சரியான நேரத்தில் பிசிசிஐ-யிடம் அவர் கூறியுள்ளார் என்பதையும் போலீஸ் கூறியுள்ளனர்.

கடந்த 2016 மற்றும் 2017ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற இரு அணிகளும் ஊழல் செய்துள்ளதாக புகார் எழுந்தது. அதனால் அந்த இரு அணிகளையும் இரு ஆண்டுகள் விளையாட தடை விதித்துள்ளது பிசிசிஐ என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் 2022 போட்டிக்கான மிகப்பெரிய அளவில் ஏலம் வருகின்ற பிப்ரவரி மாதத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.