“நான் எப்பொழுதும் போலத்தான் பேட்டிங் செய்தேன் ; ஆனால் அவர் பட்டைய கிளப்பிட்டாரு “- கேப்டன் டூ பிளெசிஸ் பேட்டி ..!

0

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின், நேற்றைய போட்டி (ஏப்ரல் 02) அன்று இரவு 07.30 மணியளவில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது.

அப்போது, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்தது. அதைத் தொடர்ந்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கேப்டன் டூ பிளெசிஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 16.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்களை எடுத்தது. இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

குறிப்பாக, உள்ளூர் மைதானத்தில் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வந்த நிலையில், வெற்றி பெற்று சாதனைப் படைத்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இதனால் அந்த அணியின் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியை, பெங்களூரு அணி பதிவு செய்துள்ளது.

பெங்களூரு அணி தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 82 ரன்களையும், கேப்டன் டூ பிளெசிஸ் 73 ரன்களையும் எடுத்துள்ளனர்.

போட்டிக்கு பின் பேட்டியளித்த கேப்டன் டூ பிளெசிஸ், “ஐ.பி.எல். லீக் தொடரின் முதல் போட்டி எங்களுக்கு நல்ல தொடக்கமாக அமைந்தது. பவர் பிளேயில் வீரர் சிராஜ் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எங்களது பவுலர்கள் சிறப்பாக விளையாடினர்.”

“இருந்தாலும், கடைசி 2- 3 ஓவர்கள் எங்களுக்கு முன்னேற்றம் தேவைப்பட்டது. விராட் கோலியுடன் இணைந்து பேட்டிங் செய்தது மகிழ்ச்சியான தருணம்; முக்கியமான நாள் ஆகும். விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நான் கடந்த நாட்களில் எப்படி விளையாடியனோ, அப்படி தான் தற்போது விளையாட விரும்புகிறேன். இளம் வீரர்கள் விளையாடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here