ரோஹித், சூர்யா இல்லை ; இவர் மட்டும் இல்லையென்றால், மும்பை அணி 100 ரன்கள் கூட அடித்திருக்காது ; பெருமூச்சு விட மும்பை அணி ;

0

ஐபிஎல் : 5வது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டூப்ளஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதி விளையாடி வருகின்றனர்.

இந்த போட்டி பெங்களுருவில் உள்ள சின்ன சுவாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கி விளையாடி வருகிறது மும்பை இந்தியன்ஸ்/

ஐந்து முறை சாம்பியன் -ஐ கைப்பற்றிய அணி போல விளையாடாமல் மோசமான நிலையில் இருக்கிறது மும்பை இந்தியன்ஸ். ஆமாம், மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர் மற்றும் டாப் 4 வீரர்களான ரோஹித் சர்மா, இஷான் கிஷான், கேமரூன் க்ரீன் மற்றும் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து விக்கெட்டை இழந்தனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பலம் இப்பொழுது பலவீனமாக மாறியுள்ளதா ?

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முக்கியமான பலம் அதிரடியாக விளையாடும் வீரர்கள் தான். அதுவும் குறிப்பாக பேட்டிங் தான். ஆமாம், அதிரடியாக விளையாடும் சூரியகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷான் தொடர்ச்சியாக விக்கெட் இழந்தது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் திலக் வர்மா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அதனால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 171 ரன்களை அடித்துள்ளனர்.

அதில் ரோஹித் சர்மா 1, இஷான் கிஷான் 10, கேமரூன் க்ரீன் 5, சூர்யகுமார் யாதவ் 15, திலக் வர்மா 84*, டிம் டேவிட் 4, ஹ்ரித்திக் ஷோக்கேன் 5, அர்ஷத் கான் 15 ரன்களை அடித்துள்ளனர். அடுத்ததாக 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கி விளையாட உள்ளது பெங்களூர் அணி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here