அடுத்த உலகக்கோப்பை போட்டிக்கான பட்டியலை வெளியிட்டது ஐசிசி…. !! இந்த முறை உலகக்கோப்பை போட்டி எங்கு நடக்க போகிறது தெரியுமா ? முழு விவரம் இதோ ;

கடந்த செப்டம்பர் மாதம் தான் ஐசிசி டி20 உலகக்கோப்பை 2021 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் இறுதியாக ஆஸ்திரேலியா அணி தான் கோப்பையை வென்றுள்ளது.

கடந்த 2020ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் நடைபெற வேண்டிய ஐசிசி உலகக்கோப்பை போட்டி கொரோனா காரணமாக 2022 ஆண்டிற்கு தள்ளிவைத்தது ஐசிசி. ஆனால் கடந்த ஆண்டு ஐசிசி உலகக்கோப்பை போட்டி சரியாக நடந்தாலும் இந்தியாவில் நடக்க வேண்டிய ஐசிசி போட்டி. ஆனால் இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகம் இருந்த காரணத்தால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்து அதன்படி நடத்தியுள்ளது பிசிசிஐ. இதற்கு ஐசிசி -யும் ஒப்புதல் அளித்துள்ளது.

வருகின்ற அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது ஐசிசி டி20 2022 போட்டிகள். சற்று முன் 2022 போட்டிகளை பற்றி அறிவித்துள்ளது ஐசிசி. உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த போட்டி என்றால் அது டி20 போட்டி தான். அதுவும் இந்த முறை விராட்கோலிக்கு பதிலாக புதிய கேப்டனான ரோஹித் சர்மா தான் இந்திய அணியை வழிநடத்த உள்ளார்.

கடந்த ஆண்டு ஐசிசி டி20 2021 உலகக்கோப்பைக்கான போட்டியில் இந்திய அணி லீக் போட்டிகளில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது. இந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற போவதாக ஐசிசி அறிவித்துள்ளது.

முதல் ரவுண்ட் ;

Group A : இலங்கை, நமீபியா

Group B : வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து

சூப்பர் 12 ஸ்டேஜ் ;

குரூப் 1 ; ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் , இங்கிலாந்து , நியூஸிலாந்து மற்றும் A1,B2

குரூப் 2; பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா , A2,B1

இது படிதான் வருகின்ற அக்டோபர் மாதம் ஐசிசி டி20 2022 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற போவதாக உறுதியான தகவலை வெளியிட்டுள்ளது ஐசிசி. அதுமட்டுமின்றி, இந்திய சிரிக்கெட் அணி அக்டோபர் 23 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் மைதானத்தில் இந்திய மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் மோத உள்ளனர்.

இரண்டாவது போட்டி ; குரூப் A அணியுடன் . மூன்றாவது போட்டி அக்டோபர் 30ஆம் தேதி தென்னாபிரிக்கா அணியுடனும், நான்காவது போட்டியில் பங்களாதேஷ் அணியுடனும் மோத உள்ளது இந்திய. இறுதியாக குரூப் B அணியுடன் நவம்பர் 6ஆம் தேதி மோத உள்ளனர்.