ஒரு பவுலர் அடித்த ரன்களை கூட இந்த இருவரால் அடிக்க முடியவில்லை ; கடுப்பில் இருக்கும் ரசிகர்கள்

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சரியாக விளையாட பேட்ஸ்மேன்கள் மீது சரியான கடுப்பில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள். அதற்கு என்ன காரணம் ?

நேற்று மதியம் 2 மணியளவில் போலந்து பார்க் -கில் தொடங்கியது இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி. அதில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். நிர்ணயக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 296 ரன்களை அடித்தனர்.

அதில் அதிகபட்சமாக பவுமா மற்றும் டூஸ்ஸன் ஆகிய இருவரும் சதம் அடித்து தென்னாபிரிக்கா அணியின் ரன்களை உயர்த்த காரணமாக இருந்துள்ளனர். ஆனால் அது இந்திய அணிக்கு எமனாக மாறியுள்ளது தான் உண்மை. ஏனென்றால் 297 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலகுடன் களமிறங்கியது இந்திய.

ஆனால் இறுதி ஓவர் வரை போராடிய இந்திய அணி 265 ரன்களை மட்டுமே அடித்தது. அதுவும் 8 விக்கெட்டை இழந்தும் ஒரு பயனும் இல்லை. 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது பவுமா தலைமையிலான தென்னாபிரிக்கா அணி. அதனால் இப்பொழுது 1 – 0 என்ற அடிப்படையில் தென்னாபிரிக்கா அணி முன்னிலையில் உள்ளது.

சமீபத்தில் தான் டெஸ்ட் போட்டிக்கான தொடரில் தோல்வியை பெற்றுள்ளது இந்திய. பின்னர் இப்பொழுது முதல் ஒருநாள் போட்டியின் தோல்வியும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆமாம்…! சமுகவலைத்தளங்களில் இந்திய அணியின் மோசமான மிடில் ஆர்டரை பற்றி அவரவர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் 17, ரிஷாப் பண்ட் 16, வெங்கடேஷ் ஐயர் 2 ரன்களை மட்டுமே அடித்தனர். ஆனால் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷர்டுல் தாகூர் இறுதி வரை விளையாடி ஆட்டம் இழக்காமல் 43 பந்தில் 50 ரன்களை அடித்து தொம்சம் செய்தார்.

ஒரு பவுலரால் 50 ரன்களை அடிக்க முடியும் என்றால் ஏன் ? ஒரு பேட்ஸ்மேன்களால் அதனை அடிக்க முடியாத ? என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். கிரிக்கெட் ரசிகர்களே !!! நீங்க சொல்லுங்க.. ! எந்த காரணத்தால் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது …! உங்கள் கருத்துக்களை மறக்காமல் Comments பண்ணுங்க….!!!!