இன்று மதியம் 2 மணியளவில் தொடங்க உள்ளது இரண்டாவது ஒருநாள் போட்டி. அதில் பவுமா தலைமையிலான தென்னாபிரிக்கா அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் மோத உள்ளனர்.
முதல் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்று 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது தென்னாபிரிக்கா அணி. அதனால் இன்றைய போட்டியில் நிச்சியமாக இந்திய அணி வென்றே ஆக வேண்டும், இல்லாவிட்டால் ஒருநாள் போட்டிக்கான தொடரிலும் இந்திய அணிக்கு தோல்வி தான்.
நேற்று முன்தினம் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொல்லும் அளவிற்கு விளையாடவில்லை என்பது தான் உண்மை. அதில் ரிஷாப் பண்ட் 16, ஷ்ரேயாஸ் ஐயர் 17 மற்றும் வெங்கடேஷ் ஐயர் 2 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் இரண்டாவது ஒருநாள் போட்டியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று பலர் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.
இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா ; ஒரு போட்டியை வைத்து ஒரு வீரரை குறைத்து மதிப்பிட முடியாது. ஒரு வீரருக்கு போதுமான அளவு வாய்ப்பு கொடுத்தால் அவர் எப்படி விளையாடுகிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.
ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஆதரவாக பேசியுள்ளார் ஆகாஷ் சோப்ரா. தொடர்ந்து அணியில் இருக்கும் வீரர்களை மாற்றி கொண்டே இருந்தால் சில விஷயங்கள் செயல்படாது. பவுன்சர் பந்து வீசுக்கு எதிராக அதிகமான அளவில் பேட்டிங் செய்து வருகிறார் ஷ்ரேயாஸ் ஐயர். அதனால் இன்னும் சில போட்டிகளுக்கு பிறகு தான் அணியில் இருந்து வெளியேற்றுவதை பற்றி யோசிக்கலாம் என்று கூறியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.
ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். அதில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். ஆனால் அதன்பிறகு தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.