டி-20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் முக்கியமான வீரர்களுக்கு பதிலாக 4 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர் ;

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் டி-20 உலகக்கோப்பை போட்டிகள் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. அதுமட்டுமின்றி இந்த முறை உலகக்கோப்பை போட்டிகள் அனைத்தும் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது.

உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட போகும் 15 பேர் கொண்ட அணிகளை சில நாடுகள் அறிவித்த நிலையில் நேற்று முன்தினம் பிசிசிஐ-யும் இந்திய கிரிக்கெட் அணியின் 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதில் சிலர் எதிர்பார்த்தபடியும் சிலர் எதிர்பாராத வகையிலும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் விவரம் :

ரோஹித் சர்மா , கே.எல்.ராகுல், விராட்கோலி, சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக், அர்ஷதீப் சிங், ஹர்ஷல் பட்டேல், புவனேஸ்வர் குமார், ஜஸ்பீர்ட் பும்ரா, அக்சர் பட்டேல், யுஸ்வேந்திர சஹால், ரவிச்சந்திரன் அஸ்வின், ஹர்டிக் பாண்டிய போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

சமீபத்தில் நடந்த முடிந்த ஆசிய கோப்பை 2022ல் இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறாத நிலையில் சூப்பர் 4 லீக் போட்டிகளில் மோசமான நிலையில் தோல்வியை பெற்று வெளியேறியது. அதற்கு முக்கியமான காரணம் இந்திய அணியில் சரியான பவுலர்கள் இடம்பெறாதது தான் காரணம்.

பும்ரா, ஹர்ஷல் பட்டேல் போன்ற முன்னணி பவுலர்களுக்கு பதிலாக இளம் வீரரான ஆவேஷ் கான் மற்றும் அர்ஷதீப் சிங் போன்ற வீரர்களுக்கு தான் ப்ளேயிங் 11ல் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. அதனால் சரியாக ரன்களை கட்டுப்படுத்த முடியாத நிலையில் தோல்வியை பெற்று வெளியேறியுள்ளது இந்திய.

எப்பொழுதும் மற்ற நாடுகளுக்கு இடையேயான சீரியஸ் தொடரில் சிறப்பாக விளையாடி பல தொடரில் வெற்றியை கைப்பற்றி கொண்டு வருகிறது இந்திய. ஆனால் ஆசிய , டி-20 உலகக்கோப்பை போன்ற பல நாடுகள் பங்கேற்கும் முக்கியமான போட்டிகளில் மட்டும் இந்திய அணி சொதப்பி வருகிறது தான் உண்மை.

இந்த 15 பேர் கொண்ட வீரர்களுக்கு காயம் ஏதாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் ஏற்பட்டால், அவர்களுக்கு பதிலாக முகமத் ஷமி, ஸ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சஹார் போன்ற நான்கு வீரர்கள் காத்திருப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அர்சத்தீப் சிங் -க்கு பதிலாக தீபக் சஹார் இடம்பெற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியில் ப்ளேயிங் 11ல் யார் யார் இடம்பெற்றால் ஐசிசி கோப்பையை வெல்ல முடியும் ? உங்கள் ப்ளேயிங் 11 வீரர்களை மறக்காமல் COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!