இந்திய அணிக்கு திரும்பிய இரு முக்கியமான பவுலர் ; சந்தோஷத்தில் இருக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ;

0

சமீபத்தில் தான் ஆசிய கோப்பை போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் இலங்கை அணி இந்த ஆண்டு சாம்பியன் படத்தை கைப்பற்றியுள்ளனர். ஆனால் இந்திய கிரிக்கெட் அணி ?

இந்த ஆண்டு ஆசிய கோப்பை 2022 தொடங்கும் முன்பு இந்திய கிரிக்கெட் அணி வெல்லும் என்று பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அதேபோல முதல் லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய நிலையில் இந்திய சூப்பர் 4 லீக் சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆனால் சூப்பர் 4 லீக் சுற்றில் பெரிய அளவில் விளையாடாத காரணத்தால் இறுதி போட்டிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது இந்திய.

அதற்கு முக்கியமான காரணம் பவுலிங் தான். ஏனென்றால் பேட்டிங்-கில் ஓவர் விட்டாலும் மற்ற வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை அடித்து கொண்டு வந்தனர். ஆனால் பவுலிங் தான் மோசமான நிலையில் இருந்து கொண்டே வருகிறது. அதற்கு முக்கியமான காரணம் பும்ரா, ஹர்ஷல் பட்டேல் போன்ற வீரர்களுக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் ஆசிய கோப்பை விளையாட முடியாமல் போனது.

அதனால் தான் இந்திய அணியால் ஆசிய கோப்பையில் விளையாட முடியவில்லை என்று கூறி வருகின்றனர். அதனை தொடர்ந்து வருகின்ற அக்டோபர் மாதம் ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. அதற்க்கான அணிகளை பல நாடுகள் அறிவித்து வருகின்றனர். அதேபோல தான் நேற்று இரவு இந்திய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ.

இந்திய அணியின் விவரம் :

ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்டிக் பாண்டிய, ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால், அக்சர் பட்டேல், ஜஸ்பீர்ட் பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், அர்ஷதீப் சிங் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதில் பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் ஆசிய கோப்பையில் இந்திய அணியின் பவுலிங் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. ஏனென்றால் முன்னணி பவுலரான பும்ரா, ஹர்ஷல் பட்டேல் போன்ற வீரர்கள் அணியில் இல்லை என்ற காரணத்தால்.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here