இனிமேல் டெஸ்ட் போட்டிக்கான அடுத்த கேப்டன் இவர் தான் ; கூடிய விரைவில் அறிவிக்க உள்ளனர் ; அப்போ ரோஹித் ?

0

டெஸ்ட் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியும் நான்கு டெஸ்ட் போட்டிகளுக்கான தொடர் போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.

இதுவரை நடந்து முடிந்த இரு போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளனர். அதுமட்டுமின்றி, மீதமுள்ள இரு போட்டிகளில் ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றால் தொடரை வென்றுவிடும்.

அதனால் இந்திய அணியை காட்டிலும் ஆஸ்திரேலியா அணி தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். சமீப காலமாகவே இந்திய அணியின் பங்களிப்பு முன்னேற்றத்தை அடைந்து வருகின்றனர். ஆமாம், அதிலும் குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறது இந்திய.

டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் தீடிர் விலகல் :

இந்திய அணியின் தொடக்க வீரர் மற்றும் துணை கேப்டனான கே.எல்.ராகுலின் பங்களிப்பு சமீபத்தில் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தான் உண்மை. அதுமட்டுமின்றி, ஷிகர் தவானை காட்டிலும் கே.எல்.ராகுல் குறைவான ரன்களை மட்டுமே அடித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி, சமீபத்தில் இளம் வீரரான சுப்மன் கில் சதம் அடித்தார். இப்படி திறமையான வீரர்கள் அணியில் இருக்கும்போது ஏன் ? கே.எல். ராகுலுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது என்று பல எதிர்ப்புகள் எழுந்தது.

அதனால் உடனடியாக துணை கேப்டன் பதவியில் இருந்து கே.எல்.ராகுலை வெளியேற்றினார்கள். அவருடைய இடத்தில் சுப்மன் கில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, அடுத்த இந்திய அணியின் துணை கேப்டன் என்ற கேள்வி எழுந்த நிலையில் ஒரு முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

அதில் ரவீந்திர ஜடேஜா தான் அடுத்த துணை கேப்டனாக விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி ஜடேஜா கேப்டனாக இடம்பெற்றால் நிச்சியமாக அடுத்த டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாக அமைய வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான ஆல் – ரவுண்டராக விளையாடி வரும் ரவீந்தர ஜடேஜாவின் பங்களிப்பு இந்திய கிரிக்கெட் அணிக்கு தேவை. அதனால் அவர் துணை கேப்டனாக இடம்பெற்றால் நிச்சியமாக ரோஹித் ஷர்மாவிற்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here