இந்த முறை இவரை வைத்து டெஸ்ட் பண்ண போறோம் ; ஆனால் ஓப்பனிங் இல்லை ; கே.எல்.ராகுல் ஓபன் டாக் ; முழு விவரம் இதோ ;

0

இன்று முதல் தொடங்கியது கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மற்றும் தெம்பா பவுமா தலைமையிலான தென்னாபிரிக்கா அணியும் முதல் ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளனர்.

அதில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதனால் அதிக ரன்களை அடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது தென்னாபிரிக்கா. டாஸ் தோல்விக்கு பிறகு பேட்டி அளித்த கே.எல்.ராகுல் ;

நாங்களும் முதலில் பேட்டிங் செய்ய தான் முடிவு செய்தோம். ஆனால் பேட்டிங் அல்லது பவுலிங் ஏதுவாக இருந்தாலும் பரவாயில்லை நாங்க விளையாட தயாராக தான் உள்ளோம். இந்த முறை எங்கள் அணியில் திறமையான சுழல் பந்து வீச்சாளர்கள் அதிகம் உள்ளனர். இந்த முறை பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகிய இருவரும் இருப்பதால் எதிர் அணியின் விக்கெட்டை விரைவாக கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ளது.

அதுமட்டுமின்றி இந்த முறை வெங்கடேஷ் ஐயரை போட்டியில் விளையாட வைத்துள்ளோம், அதனால் அவர் இப்படி மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்வார். இந்த முறை சில யுக்திகளை பயன்படுத்த போகிறோம். ஆனால் ஒன்று நாங்கள் பேட்டிங் செய்ய முதல் பந்தில் இருந்து அதிரடியாக விளையாட போகிறோம் என்று கூறியுள்ளார் கே.எல்.ராகுல்.

முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 50 ஓவர் முடிவில் 296 ரன்களை அடித்துள்ளது. வெறும் நான்கு விக்கெட்டை மட்டுமே இலந்துள்ளது தென்னாபிரிக்கா. டி-காக் 27, மலன் 6, பவுமா 110,மர்க்கரம் 4, வான் டர் டிசைன் 129 ரன்களை அடித்துள்ளனர். இப்பொழுது இந்திய அணி 297 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலகுடன் களமிறங்கியுள்ளது. வெற்றியை கைப்பற்றுமா இந்திய அணி ?

இந்திய அணியின் ப்ளேயிங் 11 ;

கே.எல்.ராகுல், ஷிகர் தவான், விராட்கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பண்ட் , வெங்கடேஷ் ஐயர், ஷர்டுல் தாகூர், ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஸ்வர் குமார், ஜஸ்ப்ரிட் பும்ரா, யுஸ்வேந்திர சஹால்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here