இனியும் இவர் கேப்டனாக இருந்தாலும் இந்திய அணிக்கு ஆபத்து தான் ; தொடக்க வீரரை வெளியேற்றுங்கள் ;

பங்களாதேஷ் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு எதிரான மூன்று ஒருநாள் மற்றும் இரு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த மூன்று ஒருநாள் போட்டியில் 2 – 1 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணி தொடரை கைப்பற்றியுள்ளது. அதனை தொடர்ந்து இப்பொழுது இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது இந்திய.

நேற்று காலை 9:30 மணியளவில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு வழக்கம் போல சொதப்பலான தொடக்க ஆட்டம் தான் அமைந்தது. ஆனால் புஜாரா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் சிறப்பான பார்ட்னெர்ஷிப் காரணத்தால் இந்திய கிரிக்கெட் அணிக்கு ரன்கள் குவிந்தன.

அதனால் முதல் நாள் இறுதிவரை 90 ஓவர் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி 6 விக்கெட்டை இழந்த நிலையில் 278 ரன்களை அடித்துள்ளனர். அதில் கே.எல்.ராகுல் 22, சுப்மன் கில் 20. புஜாரா 90, விராட்கோலி 1, ரிஷாப் பண்ட் 46, ஸ்ரேயாஸ் ஐயர் 82*, அக்சர் பட்டேல் 14 ரன்களை அடித்துள்ளனர்.

இவரை யார் தொடக்க வீரராக விளையாட சொன்னது ? இவரை அணியில் இருந்து வெளியேற்றுங்கள் ; ரசிகர்கள் ஆவேசம் :

எப்பொழுதும் ஒரு அணியின் தொடக்க ஆட்டம் சிறப்பாக அமைந்தால் மட்டுமே அதிகபடியான ரன்களை சுலபமாக அடிக்க முடியும். இல்லையென்றால், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் ஏற்பட்டு விக்கெட்டை விரைவாக இழக்க கூடிய சூழல் கூட உருவாகலாம். கடந்த சில மாதங்களாவே இந்திய அணியின் தொடக்க ஆட்டம் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய மற்றும் உலகக்கோப்பை போன்ற போட்டிகளில் ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுலின் தொடக்க ஆட்டம் மிகவும் மோசமான நிலையில் இருந்த காரணத்தால் தான் கோப்பையை வெல்ல முடியவில்லை என்று அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் மறுபடியும், கே.எல்.ராகுலை கேப்டனாக நியமனம் செய்தது மட்டுமின்றி, தொடக்க வீரராக களமிறங்க வைத்தது தவறான முடிவு என்று ரசிகர்கள் ஆவேசம் அடைந்துள்ளனர்.

கே.எல்.ராகுல் முதல் டெஸ்ட் போட்டியில் 22 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்துள்ளனர். இவருக்கு பதிலாக புஜாரா மற்றும் சுப்மன் கில் தொடக்க வீரராக களமிறங்கிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கே.எல்.ராகுல் கேப்டனாக இடம்பெற்றதால் தான் ப்ளேயிங் 11ல் இடம்பெற்றுள்ளார். அப்படி இல்லையென்றால் அவருக்கு பதிலாக யார் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் ?