பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி-20 மாற்றம் டெஸ்ட் தொடர் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த 7 டி-20 போட்டியில் இங்கிலாந்து அணி 4 – 3 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது இங்கிலாந்து அணி.
அதனை தொடர்ந்து இரு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதிலும் இங்கிலாந்து அணி வென்றுள்ளதால் டெஸ்ட் போட்டிக்கான தொடரையும் கைப்பற்றியுள்ளது இங்கிலாந்து அணி.
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் சுருக்கம் :
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதல் இன்னிங்ஸ் -ல் களமிறங்கிய இங்கிலாந்து அணி 51.4 ஓவர் முடிவில் 10 விக்கெட்டை இழந்த நிலையில் 281 ரன்களை கைப்பற்றினர். இதில் அதிகபட்சமாக டுக்கெட் 63, ஓலி பாப் 60, ஸ்டோக்ஸ் 30, வில் ஜாக்ஸ் 31, மார்க் வுட் 36 ரன்களை அடித்துள்ளனர். பின்பு முதல் இன்னிங்ஸ் விளையாடிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டனான பாபர் ஆசாம் மற்றும் சவுத் ஷகீல் போன்ற இருவரை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் விக்கெட்டை இழந்தது கொண்டே வந்தனர்.
62.5 ஓவர் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்த நிலையில் 202 ரன்களை அடித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி. பின்பு இரண்டாவது இன்னிங்ஸ்-ல் களமிறங்கிய இங்கிலாந்து அணி 64.5 ஓவர் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்த நிலையில் 275 ரன்களை குவித்தனர். அதில் டுக்கெட் 79, ஹார்ரி புரூக் 108, பென் ஸ்டோக்ஸ் 41 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர். பின்பு 354 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பாகிஸ்தான் அணி.
ஆனால் தொடக்க ஆட்டம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாத காரணத்தாலும் , கேப்டனான பாபர் ஆசாம் பங்களிப்பு இல்லாத காரணத்தாலும் பாகிஸ்தான் அணி 328 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் 26 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வென்ற இங்கிலாந்து அணி, 2 – 0 என்ற கணக்கில் டெஸ்ட் போட்டிக்கான தொடரையும் கைப்பற்றியுள்ளனர்.
இதனால் இந்திய கிரிக்கெட் அணிக்கு என்ன பலன் ?
கடந்த ஆண்டு தொடங்கிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த போட்டிகளின் அடிப்படையில் ஆஸ்திரேலியா அணி முதல் இடத்திலும், தென்னாபிரிக்கா அணி இரண்டாவது இடத்திலும், இலங்கை அணி மூன்றாவது இடத்திலும், இந்திய கிரிக்கெட் அணி நான்காவது இடத்திலும் உள்ளனர்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பாகிஸ்தான் அணியின் பங்களிப்பு மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் இனிவரும் போட்டிகளில் வென்றாலும் பாகிஸ்தான் அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இறுதி போட்டியில் விளையாட முடியாது. அதனால் இந்திய அணிக்கு அது சாதகமாக மாறியுள்ளது. இருந்தாலும் இனிவரும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் கவனமாக விளையாடாமல் விட்டால் சந்தேகம் தான்.
கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இறுதி போட்டி வரை முன்னேறிய நிலையில் நியூஸிலாந்து அணியிடம் தோல்வியை பெற்றது இந்திய என்பது குறிப்பிடத்தக்கது.