VIDEO : ஐயோ இவருக்க இந்த நிலைமை ; நடுரோட்டில் தாக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் ;

0

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான நான்கு டெஸ்ட் போட்டிக்கான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த போட்டியில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது இந்திய.

அதனை தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான தொடர் இன்று காலை முதல் நடைபெற இருக்கிறது. அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

இந்திய அணியின் இளம் வீரர் ரசிகர்களால் தாக்கப்பட்டுள்ளார் ; அது யார் தெரியுமா ?

இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 2018ஆம் ஆண்டு அறிமுகம் ஆனவர் தான் இளம் வீரரான பிருத்வி ஷாவ். ஆனால் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கொடுக்க்கப்பட்டதா என்று கேட்டால் அது இல்லை ..! ஏனென்றால், பிருத்வி ஷாவ்-ன் பங்களிப்பு எதிர்பார்த்த படி இல்லாத காரணத்தால் வெறும் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே சமீப காலமாக விளையாடி வருகிறார்.

இதுவரை 5 டெஸ்ட் போட்டியில் 339 ரங்களையும், 6 ஒருநாள் போட்டியில் 189 ரன்களையும், 1 டி-20 போட்டியில் 0ரன்களை மட்டுமே அடித்துள்ளார். பிருத்வி ஷாவ் இறுதியாக விளையாடிய டெஸ்ட் போட்டி : ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடர் (2020). இறுதியாக விளையாடிய ஒருநாள் போட்டி : இலங்கை அணிக்கு எதிரான தொடரில் (2021) என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று பிரபலமான ஹோட்டல் வெளியில் இளம் வீரரான பிருத்வி ஷாவ் ரசிகர்களால் தாக்கப்பட்டுள்ளார். பின்பு போலீசார், 23வயதான கில்-ஐ கைது செய்துள்ளனர். மேலும் பிருத்வி ஷாவ்-உடன் அவரது நண்பர் இருந்துள்ளார். அவர் கூறுகையில் ;

“புதன்கிழமை காலையில் பிருத்வி ஷாவ் ஒரு பிரபலமான ஹோட்டல்-ளுக்கு உள்ளே செல்லும்போது ஒரு ஆண் மற்றும் பெண் இணைந்து கொண்டு செல்பீ எடுக்க ஆசைப்பட்டனர். சரி என்று சொன்ன பிருத்வி ஷாவ்-விடம் தொடர்ந்து செல்பீ எடுத்து கொண்டே இருந்தனர்.”

“போதும் என்று பிருத்வி ஷாவ் சொன்னதை அவர்கள் கேட்கவே இல்லை. அதனால் பிருத்வி ஷாவின் நண்பர் உடனடியாக மேனேஜர் -க்கு கால் செய்து, அந்த இரு ரசிகர்களை போக சொன்னனர். பின்பு பிருத்வி ஷாவ் வெளிய வரும்போது அவர்கள் (செல்பீ) எடுத்து கொண்ட நபர்கள். பால் மற்றும் பேட் -உடன் காத்துகொண்டு இருந்தனர்.”

“பால் வீசி தாக்கியது மட்டுமின்றி, எங்களை பின்தொடர்ந்து சரியாக நேரம் பார்த்து காரின் கண்ணாடியை உடைத்து விட்டனர் என்று கூறியுள்ளார். அதனால் போலீசார் என்ன நடந்தது என்று தீவிரமான விசாரித்து வருகின்றனர்.”

என்னதான் பிரபலமான கிரிக்கெட் வீரராக இருந்தாலும் அவர்களால் சாதாரணமாக ஒரு கடைக்கு அல்லது குடும்பத்துடன் ஒரு சினிமா படத்துக்கு போக முடியுமா என்று கேட்டால் மிகவும் சிரமம் தான். அதனால் அவர்களுக்கும் (கிரிக்கெட் வீரர்களுக்கு) கிரிக்கெட்டை தாண்டி தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது என்பது தான் உண்மை.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here