எனக்கு என்னமோ..! இவர் டி-20 உலகக்கோப்பை போட்டியில் இடம்பெற்றிருந்தால் இந்திய வென்றிருக்கும் ; தினேஷ் கார்த்திக் ஓபன் டாக் ;

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் இலங்கை அணிக்கு எதிரான தொடர் போட்டிகள் வருகின்ற ஜனவரி 3ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. அதற்கான அணியை சமீபத்தில் வெளியிட்ட நிலையில் அனைத்து வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

இந்திய அணியின் பலம் மற்றும் பலவீனம் :

இந்திய கிரிக்கெட் அணி எப்பொழுது மற்ற அணிகளுக்கு இடையேயான தொடர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்றி வருகிறது. ஆனால், டி-20 உலகக்கோப்பை, ஆசிய கோப்பை போன்ற போட்டிகளில் மட்டும் இந்திய கிரிக்கெட் அணிவதால் வெல்ல முடியாமல் தவித்து வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி இறுதியாக தோனி கேப்டனாக இருந்த போது தான் கோப்பையை வென்றுள்ளனர். அதனை அடுத்து ஐசிசி கோப்பைகளை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது. அதுமட்டுமின்றி, சமீபத்தில் நடந்து முடிந்த டி-20 உலகக்கோப்பை 2022 லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய நிலையில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது இந்திய.

ஆனால் அரையிறுதி சுற்றில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடியது இந்திய. அதில் இந்திய கிரிக்கெட் பவுலர்களால் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியாமல் போனது. அதனால், 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்றது. அதுமட்டுமின்றி, சமீபத்தில் நடந்து முடிந்த பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான தொடரில் 2 – 1 என்ற நிலையில் தொடரை கைபற்ற முடியாமல் வெளியேறியது இந்திய. இதற்கு இந்திய அணியின் மோசமான பவுலிங் தான் காரணம் என்று அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தினேஷ் கார்த்திக் கருத்து :

சமீபத்தில் இந்திய அணியின் பினிஷர் தினேஷ் கார்த்திக் கூறுகையில் : “எனக்கு தெரிந்து இவர் அணியில் இடம்பெற்றிருந்தால் எதிர் அணிகளுக்கு நிச்சியமாக மிகப்பெரிய இழப்புகள் ஏற்பட்டு இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் இதனை பற்றி பேசிய தினேஷ் கார்த்திக் : “இந்த மாதிரியான சூழ்நிலையில் கேப்டன் மற்றும் பயிற்சியாளர்கள் செய்யும் முடிவுகள் மிகவும் முக்கியமான ஒன்று. உண்மையை சொல்ல போனால், சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தொடக்க சிறப்பாக தான் பவுலிங் செய்தார். ஆனால் இறுதியாக சொதப்பிவிட்டார்.”

“ஆனால் யுஸ்வேந்திர சஹால் அப்படி கிடையாது..! நிச்சியமாக அவர் (சஹால்) அணியில் இடம்பெற்றிருந்தால் எதிர் அணிகளுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கும். அதுமட்டுமின்றி, அணியின் சிறந்த தேர்வாக அமைத்திருந்திருக்கும். இது போன்ற முக்கியமான தேர்வுகள் தான் போட்டியை சுவாரஷியமாக மாற்றிருக்கும் என்று கூறியுள்ளார் தினேஷ் கார்த்திக்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here