வருகின்ற ஜனவரி 3ஆம் தேதி முதல் ஜனவரி 15 வரை இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் மற்றும் டி-20 தொடர் போட்டிகள் நடைபெற உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான தொடரில் பங்களாதேஷ் அணியும், டெஸ்ட் போட்டிக்கான தொடரில் இந்திய அணியும் வென்றுள்ளனர்.
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் வீரர்கள் அறிவிப்பு :
கடந்த இரு தினங்களுக்கு முன்பு தான் இலங்கை அணிக்கு எதிராக விளையாடும் இந்திய வீரர்கள் அறிவிப்பு.
டி-20 போட்டிக்கான அணி விவரம் :
ஹர்டிக் பாண்டிய (கேப்டன்), சூரியகுமார் யாதவ், இஷான் கிஷான், இஷான் கிஷான், ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சஹால், அக்சர் பட்டேல், அர்ஷதீப் சிங், ஹர்ஷல் பட்டேல், உம்ரன் மாலிக்,சிவம் துபே மற்றும் முகேஷ் குமார் போன்ற வீரர்களை தேர்வு செய்துள்ளனர்.
ஒருநாள் போட்டிக்கான அணி விவரம் :
ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்டிக் பாண்டிய, சுப்மன் கில், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், இஷான் கிஷான்,வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், முகமத் ஷமி, முகமத் சிராஜ், உம்ரன் மாலிக், அர்ஷதீப் சிங் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
6 மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாடாத நிலையில் இருக்கும் விக்கெட் கீப்பர் :
இந்த வருடம் தொடக்கத்தில் இருந்தே இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் சரியாக வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார் ரிஷாப் பண்ட். ஏனென்றால் ஐபிஎல் 2022 போட்டியில் அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக்-ஐ ரிஷாப் பண்ட் -க்கு பதிலாக அணியில் தேர்வு செய்தனர். அதனை அடுத்து ரிஷாப் பண்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தும் அதனை சரியாக பயன்படுத்தவில்லை என்பது தான் உண்மை. அதனை தொடர்ந்து நேற்று ரிஷாப் பண்ட் -க்கு கார் விபத்தில் சிக்கினார். அதனால் குறைந்தது 3 முதல் 6 மாதங்கள் வரை எந்த விதமான போட்டிகளிலும் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இந்திய அணியில் மாற்றாக இஷான் கிஷான், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் இருக்கின்றனர். ஆனால் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனாக திகழ்கிறார் ரிஷாப் பண்ட். இப்படி 6 மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டிய சூழலில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி என்ன செய்ய போகிறது ?