வீடியோ : Rules எங்களுக்கு இல்லை ; பயமா இருக்கா ? இதற்கு பிறகு இன்னும் பயங்கரமாக இருக்கும் ; சிஎஸ்கே அணி வெளியிட்ட வீடியோ ;

0

ஐபிஎல் : 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனது ஐபிஎல் டி-20 போட்டிக்கான தொடர். அதில் இருந்து இதுவரை வெற்றிகரமாக வும் சிறப்பாகவும் நடைபெற்று வருகிறது. அதற்கு முக்கியமான காரணம் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே கிடைத்த ஆதரவு தான் முக்கியமான காரணம்.

இதுவரை வெற்றிகரமாக 15 ஆண்டுகள் நடைபெற்று முடிந்த நிலையில் 16 சீசன் வருகின்ற ஏப்ரல் 2023ல் தொடங்க இருக்கிறது. அதற்கான மினி ஏலம் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி அன்று தான் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் எதிர்பார்க்காத பல விஷயங்கள் நடைபெற்று முடிந்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :

ஐபிஎல் டி-20 போட்டிக்கான தொடரில் அதிக போட்டிகளில் வென்ற அணியாகவும், அதிக முறை ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணியாகவும் திகழ்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதுமட்டுமின்றி, மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை மொத்தம் நான்கு முறை கோப்பையை வென்றுள்ளனர்.

அதுமட்டுமின்றி, சமீபத்தில் நடந்து முடிந்த மினி ஏலத்தில் இங்கிலாந்து அணியின் முன்னணி வீரரான பென் ஸ்டோக்ஸ்-ஐ ஏலத்தில் கைப்பற்றியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதனால் ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ் போன்ற ஆல் – ரவுண்டர்களை வைத்திருப்பதால் சென்னை அணிக்கு கூடுதல் பலமாக தான் தெரிகிறது.

இதனை அடுத்து சென்னை அணி ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்த வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. அதில் டேவன் கான்வே அவர்கள் விக்ரம் பக்கத்தில் வரும் வசனம் ; ரூல்ஸ் மற்றும் ரெகுலேஷன் எங்களுக்கு இல்லை, அப்படி இருந்தால் மீறப்படும் என்று கூறுவது போலவும், இறுதியாக பென் ஸ்டோக்ஸ் படத்தை காட்டி பயமா இருக்கா ? இதற்கு பிறகு இன்னும் பயங்கரமாக இருக்கும் என்று தோனி மற்ற அணிகளுக்கு எச்சரிக்கை கொடுப்பது போல பதிவு செய்துள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களின் பட்டியல் இதோ :

மகேந்திர சிங் தோனி, டேவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுபிரான்ஷு சேனாபதி, மொயின் அலி, சிவம் துபே, ராஜேவர்தன் ஹங்காரகேகர், பிரிட்டோரியஸ், மிச்சேல் சான்டனர், ரவீந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் சவுத்திரி, மதீஷா பாரதிரான, சிமர்ஜெட் சிங், தீபக் சஹார், பிரசாந்த் சோலங்கி, மஹீஸ் தீக்ஷண.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here