மும்பை அணிக்கு இது மட்டும் நடக்கவில்லை என்றால் , இந்த முறை ப்ளே – ஆஃப் -க்கு ஆபத்து தான் ;

ஐபிஎல் : கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனது. பின்னர் ரசிகர்கள் வரவேற்பை பெற்ற ஐபிஎல் போட்டிகள் இப்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை வெற்றிகரமாக 14 சீசன் நடந்து முடிந்த நிலையில் இப்பொழுது 15வது சீசன் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று கொண்டு வருகிறது.

ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை சாம்பியன் பெற்ற அணி எது என்று கேட்டால் ? அது மும்பை இந்தியன் அணி தான். ஆமாம், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.

ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. ஏனென்றால் இதுவரை இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் தோல்வியை பெற்று புள்ளிபட்டியலில் இறுதி இடத்தில் உள்ளது மும்பை இந்தியன்ஸ்.

எப்படியாவது ஒரு போட்டியில் ஆவது வெற்றி பெற்றிட முடியாதா என்று ஏங்கிக்கொண்டு வருகிறது மும்பை இந்தியன்ஸ் அணி. இதனால் மும்பை ரசிகர்கள் வருத்தத்தில் மூழ்கியுள்ளனர். இருப்பினும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இன்னும் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு வாய்ப்பு உள்ளது.

என்ன செய்தால் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு வாய்ப்பு கிடைக்கும் ? தெரியுமா ?

6 போட்டிகள் விளையாடிய நிலையில் இன்னும் 8 போட்டிகள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீதமுள்ளது அதில் அனைத்திலும் ஒருவேளை மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றால் 16 புள்ளிகளுடன் நிச்சியமாக ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற அதிக வாய்ப்பு உள்ளது.

ஆனால் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லுமா ?? இல்லையா ? என்பது தான் சந்தேகம். ஒருவேளை ஏதாவது ஒரு போட்டியில் தோல்வியை சந்தித்தால் ப்ளே – ஆஃப் சுற்றுக்கான கனவு எல்லாம் வீணாக போய்விடும் என்பது தான் உண்மை. இந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சரியான பவுலிங் இல்லாத காரணத்தால் தான் மும்பை இந்தியன்ஸ் அணி போட்டிகளில் தோல்வியை பெற்று வருகின்றனர்.

கிரிக்கெட் ரசிகர்களே, நீங்க சொல்லுங்க மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பான கம்பேக் கொடுத்து அனைத்து போட்டிகளிலும் விளையாடி வெற்றி பெற்று ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா ?? இல்லையா ?? என்பதை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்…!