தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கி விளையாடி 0 – 3 என்ற கணக்கில் ஒருநாள் போட்டிக்கான தொடரில் மோசமான தோல்விகளை பெற்றது.
இதனை பற்றிய பேசிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் ; இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும். அதிலும் மிடில் ஆர்டர் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் தான் தோல்விகளை சந்தித்து வருகிறோம். அதுமட்டுமின்றி, ஜடேஜா மற்றும் ஹார்டிக் பாண்டிய ஆகிய இருவரும் அணியில் இடம் பெற்றால் இந்த பிரச்சனை இருக்காது என்று கூறியுள்ளார்.
ஆனால் இந்த அணியில் மாற்றம் நடைபெறுவதற்கான வாய்ப்புகளே இல்லை. ஆமாம்…! வருகின்ற பிப்ரவரி 6ஆம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளது இந்திய. அதிலும் ஜடேஜா மற்றும் ஹார்டிக் பாண்டிய ஆகிய இருவரும் அணியில் இடம்பெறவில்லை.
இந்திய அணியின் முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் மிடில் ஆர்டர் பற்றி கூறுகையில் ; நிச்சியமாக ஆல் -ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா 6வது இடத்தில் பேட்டிங் செய்வது இந்திய அணிக்கு சிறப்பான மிடில் ஆர்டர் அமைய அதிக வாய்ப்பு உள்ளது. 6வைத்து மட்டுமின்றி 5வதாகவும் பேட்டிங் செய்யலாம்.
மற்ற வீரர்களை போல இல்லாமல், ஜடேஜா எப்பொழுதும் அவருக்கு பிடித்த மாதிரி விளையாடி வருகிறார். ஒரு போட்டியில் இந்திய அணி இறுதி நேரத்தில் வெற்றி பெற வேண்டுமென்றால் அது அவரால் மட்டுமே முடியும். அதிக ஆண்டுகளாக பேட்டிங் செய்து வருகிறார். அதனால் அவரால் நிச்சியமாக சிறப்பாக மிடில் ஆர்டரில் நல்ல தீர்வு கிடைக்கும். 6வதாக ஜடேஜா, 7வதாக தீபக் மற்றும் 8வதாக ஷர்டுல் தாகூர் களமிறங்கினால் சிறப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார் தினேஷ் கார்த்திக்.
தென்னாபிரிக்கா அணியை தொடர்ந்து வருகின்ற பிப்ரவரி 6ஆம் தேதி முதல் பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளனர். இதில் ஆவது இந்திய அணி தொடரை கைப்பற்றி கம்பேக் கொடுக்குமா ?? இல்லையா ???