“நான் அணி தேர்வாளராக இருந்தால், இந்த வீரரை தேர்வு செய்வேன்”- ஷிகர்தவான் சுவாரஷிய பேட்டி!

“நான் அணி தேர்வாளராக இருந்தால், இந்த வீரரை தேர்வு செய்வேன்”- ஷிகர்தவான் சுவாரஷிய பேட்டி!

ஒருநாள், டி20, டெஸ்ட் ஆகிய மூன்று வகையான போட்டிகளிலும் அதிரடி காட்டிய இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஷிகர் தவான், கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் சொதப்பியதால் அவரை அணி நிர்வாகம் அணியில் நீக்கியிருந்தது. அதேபோல், அறிமுக வீரர்கள் இஷான் கிஷன் மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால், தனக்கான இடத்தை ஷிகர் தான் இழந்துள்ளார்.

நடப்பாண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரில், அவர் இந்திய அணியில் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின் ஷிகர் தவான் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவரிடம், இந்திய அணியில் தேர்வுக் குழுவில் நீங்கள் இருந்தால், சுப்மன் கில் மற்றும் ஷிகர் தவானில் யாரை தேர்வு செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த ஷிகர்த வான், “சுப்மன் கில், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். நான் அணி தேர்வாளராக இருந்தால், அனைத்து வகையான சர்வதேச போட்டிகளிலும் விளையாடுவதற்கு, விளையாடுவதற்கு வாய்ப்பு வழங்குவேன். ஏனெனில் அவர் நன்றாக ஃபார்மில் உள்ளார்.

தற்போதைக்கு நான் தீவிர பயிற்சியில் செய்து வருகிறேன். இந்திய கிரிக்கெட் அணியில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் வரை காத்திருப்பேன். ஆனால் ஒருபோதும் பயிற்சியைக் கைவிட மாட்டேன்” எனத் தெரிவித்தார்.

கடந்த 2012- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆயிஷா முகர்ஜியை, இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் கரம் பிடித்தார். திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இது குறித்து மனம் திறந்து பேசிய ஷிகர்த வான், “நான் திருமண உறவில் தோற்றுவிட்டேன். இது என்னுடைய முடிவு ஆகும். இப்போது என்னுடைய விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

எனக்கு 26 வயது இருந்த போது, நான் மகிழ்ச்சியாகத் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு எந்த உறவும் இல்லை. இளைஞர்கள் உணர்ச்சிவசப்பட்டு, அவசரப்பட்டு திருமணம் செய்துக் கொள்ளக் கூடாது.

திருமணம் செய்துக் கொள்ளும் நபருடன் பேசி பழகி, ஒருவரோடு, ஒருவர் இருக்கும் நேரம் ரசிக்கிறீர்களா என்று பாருங்கள்” என்று இளைஞர்களுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.