நான் மட்டும் பிசிசிஐ -யில் இருந்திருந்தால் நிச்சியமாக இவரை இந்திய அணியில் விளையாட வைத்திருப்பேன் ; மைக்கல் வாகன்

இந்திய கிரிக்கெட் அணியில் அவ்வப்போது இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு தான் வருகிறது. சமீபத்தில் தான் இந்திய அணிக்கான கேப்டன் பற்றிய சர்ச்சை ஓரளவுக்கு ஓய்ந்துள்ளது. ஆமாம், ஏனென்றால் விராட்கோலியை அணியின் கேப்டன் பதவியில் இருந்து முன்கூட்டியே அறிவிக்கலாம் வெளியேற்றியது பபிசிசிஐ.

இப்பொழுது விராட்கோலி-க்கு இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார் ரோஹித் சர்மா. இப்பொழுது இந்தியாவில் ஐபிஎல் 2022 15வது சீசன் கடந்த மாதம் 26ஆம் தேதி முதல் நடைபெற தொடங்கியுள்ளது. இதுவரை 23 போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

கிரிக்கெட் போட்டி எப்பொழுது நடைபெற்றாலும் அவரவர் கருத்துக்களை பற்றி பேசுவது வழக்கம். அதிலும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கல் வாகன் , இந்திய அணியின் வீரர்களை பற்றி அவ்வப்போது கருத்துக்களை பேசுவது வழக்கம் தான். அதேபோல தான் சமீபத்தில் முக்கியமான கருத்தை பகிர்ந்துள்ளனர்.

அதில் ” நான் மட்டும் பிசிசிஐ-யில் இருந்திருந்தால் நிச்சியமாக இந்திய அணியில் இவருக்கு இடம் கொடுத்திருப்பேன்” என்று கூறியுள்ளார் மைக்கல் வாகன். மேலும் பேசிய அவர் “உமர் மாலிக் நிச்சியமாக இந்திய அணியில் கூடிய விரைவில் விளையாட போகிறார்.”

“நான் பிசிசிஐ இடம்பெற்றிருந்தால் நிச்சியமாக உமர் மாலிக்கை மற்ற நாடுகளுக்கு இடையேயான போட்டியில் விளையாட வைத்திருப்பேன். அவருக்கு இன்னும் அதிக அனுபவம் கிடைத்திருக்கும் என்று கூறியுள்ளார் மைக்கல் வாகன் “

உமர் மாலிக் கடந்த ஆண்டு ஐபிஎல் 2021யில் தமிழக வீரரான நடராஜனுக்கு பதிலாக ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியில் இடம்பெற்றார். பின்பு அவரது அதிவேகமான பந்து வீச்சால் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி தக்கவைத்துக்கொண்டது.

அதுமட்டுமின்றி இந்திய கிரிக்கெட் வீரர்களில் நீண்ட ஆண்டுகள் கழித்து இந்த மாதிரி வேகமாக பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார் உமர் மாலிக். இந்த ஐபிஎல் 2022யில் சிறப்பாக விளையாடினால் நிச்சியமாக இந்திய அணியில் இடம்கிடைக்க வாய்ப்பு அதிகம் தான்…!

சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி 4 போட்டிகளில் விளையாடி 2 போட்டியில் வெற்றியை கைப்பற்றி புள்ளிபட்டியலில் 8வது இடத்தில் உள்ளது சன்ரைசர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.