ரோஹித் , விராட்கோலி இல்லை ; T20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு மிகவும் தேவையான வீரர் இவர் தான் ; ஹர்பஜன் சிங் பேட்டி

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐபிஎல் 2022 போட்டிகள் கடந்த 26ஆம் தேதி முதல் தொடங்கி இப்பொழுது சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த முறை பிசிசிஐ, புதிதாக (லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ்) போன்ற அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ.

இதில் குஜராத் அணியை நம்ம இந்திய அணியின் ஆல் – ரவுண்டர் ஹார்டிக் பாண்டிய சிறப்பாக வழிநடத்தி வருகிறார். இதுவரை குஜராத் அணி நான்கு போட்டிகளில் விளையாடி மூன்று போட்டியில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. அதுமட்டுமின்றி ஹார்டிக் இந்த முறை சிறப்பாக விளையாடி வருகிறார்.

ஏனென்றால் கடந்த ஆண்டு ஹார்டிக் பாண்டியாவுக்கு நடைபெற்ற அறுவை சிகிச்சைக்கு பிறகு அவரால் (ஹார்டிக் ) சரியாக பவுலிங் செய்ய முடியவில்லை. அதுமட்டுமின்றி, பேட்டிங் சொல்லும் அளவிற்கு விளையாடவில்லை என்பது தான் உண்மை. ஆமாம், அந்த நிலையிலும் ஹார்டிக் பாண்டிய உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு ஹார்டிக் பாண்டிய எந்த சீரியஸ் போட்டிகளிலும் விளையாட வில்லை. நான் பவுலிங் சரியாய் வீசும் வரை என்னை அணியில் கைப்பற்ற வேண்டாம் என்று ஹார்டிக் பாண்டிய கூடினார். கடந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு இப்பொழுது தான் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் 2022யில் ஹார்டிக் பாண்டியாவின் பேட்டிங் மற்றும் பவுலிங் மிகவும் அதிரடியாக உள்ளது தான் உண்மை. இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் கூறுகையில் ; ” குஜராத் அணியை முன்னிலையில் இருந்து அருமையாக அணியை வழிநடத்தி வருகிறார்.”

“குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக சிறப்பாக பேட்டிங் மட்டுமின்றி, இப்பொழுது அருமையாக பவுலிங் செய்து வருகிறார். இது இந்திய அணிக்கு நல்ல எதிர்காலம் உள்ளது தான் உண்மை. இந்திய அணியில் கம்பேக் கொடுக்கும்போது 6 ஓவர் பவுலிங் செய்தால் நிச்சியமாக இந்திய அணிக்கு மிகவும் நல்லதாக இருக்கும்.

“ஏனென்றால் இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிக்கான வீரரை தேர்வு செய்யும்போது அதனை சரிபார்க்க வேண்டும். ஒரு கேப்டனாக அணியை வழிநடத்தினால் மட்டுமே ஹார்டிக் பாண்டிய சிறந்த வீரராக விளையாடுவார். அதாவது ரோஹித் சர்மாவுக்கு நடந்து போல.”

“ஹார்டிக் பாண்டிய, தன் அப்பா சொன்னதை (இந்தியாவுக்காக விளையாடுவது) செய்து காட்டியுள்ளார். அதுமட்டுமின்றி ஹார்டிக் பாண்டிய கடுமையாக விளையாடி வருகிறார். ஒரு மனிதர் வாழ்க்கையின் அடிமட்டத்தில் இருந்து மேல் எழும்ப ஆசைப்பட்டால் இப்படி தான் இருக்கும் என்று கூறியுள்ளார் ஹர்பஜன் சிங்.”